15.2.2024
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்
* காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங் களவைக்கு போட்டியிட தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
டெக்கான் கிரானிக்கல், சென்னை
* தடையையும் பொருட்படுத்தாமல் டில்லி அருகே விவசாயிகள் தொடர்ந்து போராட்டம்.
* டில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பக்வத் மான் ஆகியோரை சந்திக்கிறார் மம்தா. “இந்தியா” கூட்டணி குறித்து முடிவெடுக்க இருப்பதாக தகவல்.
தி இந்து
* ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தேர்தல் கண்காணிப்பு சங்கத்தின் (கிஞிஸி) அறிக்கையின்படி, பாரதிய ஜனதா கட்சி 2022-2023ஆம் ஆண்டில் கார்ப்பரேட் நன்கொடைகள் மூலம் ரூ.680.49 கோடி பெற்றுள்ளது. இது ஒட்டு மொத்த நன்கொடையில் 90 சதவீதம் ஆகும். அனைத்து கட்சிகளும் சேர்ந்தே மீதமுள்ள 10 சதவீத நன்கொடையான ரூ.70 கோடி பெற முடிந்தது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* பஞ்சாப் விவசாயிகள் இன்று டில்லிக்கு அணிவகுத்துச் செல்கின்றனர். பத்திரிகைச் செய்திகளின்படி, அரியானாவில் அவர்களுக்காக சிறைகள் தயார் நிலையில் உள்ளன, தடுப்புக் கட்டைகள் உள்ளன. அவற்றைத் தடுக்க அனைத்து வகையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன; இவர்கள் விவசாயிகள், அவர்கள் குற்றவாளிகள் அல்ல என விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மகள் பொருளாதார நிபுணர் மதுரா சுவாமிநாதன் காட்டம்.
டைம்ஸ் ஆப் இந்தியா
* ஒன்றிய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள ‘தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும்’, ‘ஒரே நாடு – ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு’ ஆகிய 2 தீர்மானங்களை தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (14.2.2024) முன் மொழிந்தார். இந்த தீர்மானங்கள், அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறின.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment