சென்னை, பிப்.15 சட்டப் பேரவையில் நேற்று (14.2.2024) ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் அய்.பெரியசாமி தாக்கல் செய்த மசோதாவில், ஆறாவது மாநில நிதி ஆணையம் வீட்டு வரி என்ற சொல் வீடுகளுக்கு மட்டுமே வரி விதிக்கப்படும் என்றும் மற்றவகை கட்டடங்களுக்கு அல்ல என்று தவறான கருத்துப்பதிவை ஏற்படுத்துகிறது என்றும், எனவே, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்கீழ் விதிக்கப்படும் வீட்டு வரி என்ற பெயரை சொத்து வரி என்று மாற்றம் செய்ய பரிந்துரை செய்துள்ளது. அதன்படி வீட்டு வரி என்ற பெயரீட்டு முறையை சொத்து வரி என்று மாற்றம் செய்ய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்வதென்று அரசு முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா இன்று பேரவையில் நிறைவேற்றப்படவுள்ளது.