தாட்கோ 50-ஆவது ஆண்டு பொன்விழா

2 Min Read

தாட்கோ 50-ஆவது ஆண்டு பொன்விழா
சிறப்பு அஞ்சல்தலை – அமைச்சர் கயல்விழி வெளியிட்டார்

சென்னை,பிப்.15- சென்னை எம்.ஆர்.சி நகர் இமேஜ் அரங் கத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார் பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம் பாட்டுக் கழகம் 50-ஆவது பொன்விழா ஆண்டு முன் னிட்டு தாட்கோ சிறப்பு அஞ்சல் தலையினை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் நேற்று (14.02.2024) வெளியிட தமிழ் நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக தலைவர் உ.மதிவாணன் பெற் றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜ் உரை யாற்று கையில் தெரிவித்த தாவது:-

மேனாள் தமிழ்நாடு முத லமைச்சர் கலைஞரால் ஆதி திராவிடர் மக்களுக்கு அரசின் சார்பில் வீடுகளை கட்டிக் கொடுக்கும் நிறுவனமாக 1974-ஆம் ஆண்டில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) துவங்கப்பட்டது. சமூகத்தின் அடித்தட்டு நிலை யில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை பொருளாதார ரீதியில் மேம் படச் செய்யும் வகையில் பல் வேறுபட்ட தொழில் முனைவு மற்றும் திறன் மேம்பாட் டிற்கான அரசின் திட்டங் களை செயல்படுத்திடும் நிறுவ னமாக செயல்பட்டு வருகின்றது.
தாட்கோ நிறுவனமானது பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயம், சிறுதொழில், வணிகம் மற்றும் போக்குவரத்து ஆகிய துறை களில் தொழில் புரிந்து பொரு ளீட்டும் உதவும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியின மக்களுக்கு திட்டத் தொகையில் 35 விழுக்காடு அல்லது அதிகபட்சம் ரூ 3.50 இலட்சம் மானியம் வழங்கப் படுகிறது. நிதி உதவி பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2 இலட்சத்திலிருந்து 2022-2023-ஆம் ஆண்டு முதல் ரூ.3 இலட்சமாக உயர்த்தி தமிழ்நாடு முதல மைச்சர் ஆணையிட்டுள்ளார்.

தொழில் முனைவோர் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 65 வயது வரையுள்ள தனிநபர் மற்றும் குழுக்கள் தங்களது பொரு ளாதார நிலையினை உயர்த் திக்கொள்ள விவசாயம் தொடர்பான வாகனங்கள், இலகுரக, கனரக வாகனங்கள் மற்றும் மகிழுந்து வாகனம் வாங்குதல், பால் பண்னை மற்றும் கோழிப்பண்னை அமைத்தல் மேலும் பல் பொருள் அங்காடி, எழுது பொருள்விற்பனை, உடற்பயிற்சிக் கூடம், அழகு நிலையம், வெதுப்பகம், தையலகம், மின் சாதன விற்பனை, உணவகம், வாகன உதிரிபாகங்கள் விற் பனை, துணிக்கடை அமைத்தல் மற்றும் கட்டுமானப் பொருட்கள் விற்பனை போன்ற வருமானம் ஈட்டும் தொழில்கள் புரிந்திட உதவும் வகையில் வங்கிகள் மூலம் மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படுகிறது.
இளைஞர்களுக்கான திறன்மேம்பாட்டினை ஊக்கு விக்கவும் அவர்களின் வாழ்வா தாரத்தினை உயர்த்துவதற்கு தமிழ்நாடு திறன் மேம் பாட்டுக்கழகம் மற்றும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவ னங்கள் மூலம் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் தாட்கோ மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் சமூகத் தில் முன்னேற்றம் அடைய வேண்டி தமிழ்நாடு முதல மைச்சர் தாட்கோ மூலமாக பல்வேறு சிறப்பு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார் என அமைச்சர் கயல்விழி தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *