சென்னை,பிப்.14- தமிழ் நாட் டில் ரூ.19,110 கோடி மதிப்பில், புதிதாக 13 குடிநீர்த் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் நடைபெற்ற விவாதம்:
ராஜேஷ்குமார் (காங்கிரஸ்): 2006இ-ல் நிறைவேற்றப்பட்ட சுனாமி கூட்டுக் குடிநீர் திட்டத் துக்கான குழாய்கள் கிள்ளியூர் தொகுதி வழியாக கன்னியா குமரிக்கு செல்கிறது.
இந்தக் குழாய் பழுதடைந்து உடைந்துள்ளதால், விபத்துகள் நேரிடுகின்றன. இவற்றை மாற்ற வேண்டும்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச் சர் கே.என்.நேரு: தமிழ்நாட்டில் 60 இடங்களில் குழாய்கள் மாற் றப்பட்டுள்ளன.
புதிய தொழில்நுட்பத்தில் உள்ளேயும், வெளியிலும் சிமென்ட் பூச்சுடன் கூடிய இரும்புக் குழாய்கள் தற்போது அமைக்கப்படுகின்றன. வரும் பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கி, தேவைப்படின் உங்கள் பகுதிக்கு முன்னுரிமை அளித்து குழாய்கள் பதிக்கப்படும்.
துரை சந்திரசேகர் (திமுக): கொள்ளிடத்தில் 35 இடங்களில் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுப்பதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. தடுப்பணை அமைத்தால், அப் பகுதியில் நீராதாரத்தைப் பாது காக்கலாம்.
அமைச்சர் கே.என்.நேரு: முதலமைச்சருடனும், நீர்வளத் துறை அமைச்சருடனும் இது குறித்து பேசியுள்ளோம். ஆயி ரம் இடங்களுக்கு மேல் தடுப் பணை அமைப்பதற்கான பணி கள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.
காவிரியிலும், கொள்ளிடத் தில் 244 இடங்களில் தண்ணீர் எடுக்கப்படுகிறது. நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருக்க, தடுப்பணை கட்ட வேண்டும். இந்த திட்டம் அரசின் கவனத் தில் உள்ளது. நிதிநிலைக்கேற்ப திட்டம் நிறைவேற்றப்படும்.
எஸ்.பி.வேலுமணி (அதிமுக): கோவையின் குடிநீர் தேவைக் காக சிறுவாணி அணையில் இருந்து தினசரி 72 மில்லியன் லிட்டருக்கு பதில் 38 மில்லியன் லிட்டரே தண்ணீர் வழங்கப் படுகிறது.
இதனால் 25 நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் விநி யோகிக்கப்படுகிறது.
இது குறித்து விசாரித்தபோது, சிறுவாணி அணையில் இருந்து கேரள அரசு 35 மில்லியன் லிட் டர் குறைவாக நீர் வழங்குவதாக கூறுகின்றனர். கேரள அரசிடம் பேசி, நமது உரிமையை நிலை நாட்ட வேண்டும்.
அமைச்சர் கே.என்.நேரு: சிறுவாணியில் இருந்து கேரள அரசு 83 மில்லியன் லிட்டருக்குப் பதில், 38 மில்லியன் லிட்டரே தருகின்றனர்.
மழையில்லாத காரணத்தால் ஆழியாறில் இருந்து குறைவாக தண்ணீர் வருவதால், நாங்கள் சிறுவாணியில் தண்ணீர் தர வில்லை என்றனர். கடந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ் நாடு செயலாளர் மூலம் கேரள முதலமைச்சரிடம் பேசி, தண் ணீர் திறக்கப்பட்டது.
தற்போது, கோவை எம்.பி. நடராஜனிடம் கூறியுள்ளோம். அவரும் கேரள முதலமைச்ச ருடன் பேசுவதாகத் தெரிவித் துள்ளார்.
சிறுவாணி தண்ணீரை பெறும் முயற்சியை அரசு மேற்கொண்டு வருகிறது. பில்லூர் 3ஆ-வது திட் டத்தில் 110 மில்லியன் லிட்டர் குடிநீர் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. புதிதாக தினமும் 300 மில்லியன் லிட்டர் தரும் திட்டமும் தொடங்கப்பட்டுள் ளது.
எனவே, கோவை நகருக்கு ஒரு நாள் விட்டு ஒருநாள் தண்ணீர் வழங்கப்படும்.
சதாசிவம்(பாமக) : மேட்டூர் தொகுதியில் தனி கூட்டுக் குடி நீர்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
அமைச்சர் கே.என்.நேரு: திமுக ஆட்சியில் கடந்த இரண் டரை ஆண்டுகளில் குடிநீர் வாரியம் சார்பில் ரூ.7,148 கோடியில் 58 புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும், 15,156 கோடியில் புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, மறு சீரமைப்புத் திட்டங்கள் ரூ.1,658 கோடியில் நடைபெற்று வருகின் றன. புதிதாக ரூ.19,110 கோடியில் 13 திட்டங்கள் ஆய்வில் உள்ளன. 4.35 கோடி மக்கள் பயன்பெற்று வந்த நிலையில், மேலும், 3 கோடி மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டமும் நடைபெற்று வரு கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.