ஸ்டாக்ஹோம்,அக்.7- ஈரானிய சமூக செயற்பாட்டாளர் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் பெண்கள் அடக்கு முறைக்கு எதிராக போராடியதற் காகவும், மனித உரிமைகள் மற்றும் அனைவருக்கும் சுதந்திரத்தை மேம் படுத்துவதற்காக அவர் நடத்திய போராட்டத்திற்காகவும் நர்கிஸ் முகம்மதிக்கு 2023ஆம் ஆண் டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்க நார்வே நோபல் அமைப்பு முடிவு செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு பெற்ற நர்கிஸ் முகம்மதியின் துணிச்சலான போராட்டம் அவரது சொந்த வாழ்வில் மிகப்பெரிய துயரங் களுடன் தான் நிகழ்ந்திருக்கிறது. ஈரானிய ஆட்சியாளர்கள் அவரை 13 முறை கைது செய்துள்ளனர். அய்ந்து முறை அவர் குற்றவாளி என்று தண்டனை அளிக்கப்பட்டுள் ளது. இதனால், மொத்தம் 31 ஆண்டுகள் அவர் சிறைத்தண்டனை யுடன் 154 கசையடிகளையும் பெற் றுள்ளார். துயரம் என்னவென்றால், நர்கிஸ் முகம்மதி இன்னும் சிறையில்தான் இருக்கிறார்.
இயற்பியல் மாணவியான முகம்மதி, சமத்துவம் மற்றும் பெண் களின் உரிமைகளுக்காக போராடுப வராக தன்னை அடையாளப்படுத் திக்கொண்டார். . ஈரானிய பெண் களுக்காகப் போராடி சிறையில் அடைக்கப்பட்ட சமூக செயற் பாட்டாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவுவதற்கான முயற்சிகளுக்காக 2011ஆம் ஆண்டில் முதன்முறையாக கைது செய்யப்பட்டார். இந்தக் குற்றச் சாட்டின் கீழ் அவருக்கு பல ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
பிணையில் வெளிவந்த முகம் மதி, ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு எதிரான போராட்டங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவரது இந்த போராட்டம், 2015ஆம் ஆண்டு மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு, கூடுதலாக சில ஆண்டுகள் சிறைக்குப் பின் இருக்கும் நிலையை உருவாக்கியது.
கடந்த ஆண்டு ஈரானில் எழுந்த கடும் போராட்டங்கள் தெஹ் ரானில் உள்ள மோசமான எவின் சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளுக்கு தெரிய வந்தது. சிறைபிடிக்கப்பட்டதிலி ருந்து, நர்கிஸ் முகம்மதி, ஈரானில் போராட்டங்களுக்கான வலு குறை யாமல் இருக்க உதவிக்கொண்டேயிருந்தார்.
மருத்துவம், இயற்பியல், வேதி யியல், இலக்கியம் ஆகிய துறை களுக்கான நோபல் பரிசுகள் இது வரை அறிவிக்கப்பட்ட நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு வெள் ளிக்கிழமை (6.10.2023) அறிவிக்கப் பட்டுள்ளது. அடுத்து பொருளா தாரத்துக்கான நோபல் பரிசு 9.10.2023 அன்று அறிவிக்கப்படவுள்ளது.