ஆம்னி பேருந்துகளின் அழிச்சாட்டியம், கொள்ளைக் கட்டணத்திற்கு இரயில்களின் பற்றாக் குறை மிக முக்கிய காரணம் என்பதை நாம் ஏன் அறிவதில்லை .
சென்னையில் பெருங்கூட்டம் சொந்த ஊருக்கு விடுமுறை நாளில் பயணிக்கும் போது,
தொடர்ந்து மாநில அரசு சார்ந்த பேருந்து இயக் கத்தை பற்றியே வண்டி , வண்டியாக குறைகளை அள்ளிக் கொட்டும் ஊடகங்களும் சரி, பொது மக்களும் சரி, ஒன்றிய அரசின் இரயில்களின் இயக்கத்தை பற்றி வாயே திறப்பதில்லையே ஏன்?
பொங்கல் போன்ற விழாக்களுக்காக முன் பதிவை துவக்கிய 30 நிமிடங்களில் அனைத்து பயணச் சீட்டுகளும் விற்று தீர்கிறது எனில், மீதமிருக் கும் மக்களுக்காக கூடுதல் இரயில்களை இயக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை இல்லையா?
இதற்காக கோயம்பேடு சாலைகளில் அமர்வது போல் எத்தனை பேர் இரயில் நிலையங்களில் போராட்டத்துக்காக அமர்ந்திருப்பார்கள்?
விழா நாட்களை விடுங்கள், சாதாரண நாட்களில் ஈரோட்டிலிருந்து சென்னை செல்ல 20 நாட்களுக்கு முன்பாக பயணச்சீட்டு தேடினால்கூட கிடைப்ப தில்லை. சென்னையிலிருந்து ரயிலில் வருபவர்கள் Ôநல் வாய்ப்புக்காரர்கள்’ என்பது போன்ற நிலையே உள்ளது.
வந்தே பாரத்தை ப்ரோமோட் செய்ய அனைத்து ரயில்களையும் சூப்பர் ஃபாஸ்ட் என்றாக்கி , பேசஞ்சர் ரயில்களே இல்லை என்னும் நிலையை உரு வாக்கி, ரயில் நிறுத்தங்களின் அளவை பெருமளவு குறைத்து எத்தனையோ அக்கப்போர்களை உரு வாக்கி வரும் ஒன்றிய அரசை எப்போது கேள்வி கேட்கப் போகிறோம்.
பேருந்து இல்லையென்றால் அமைச்சர் சிவ சங்கரை சூழ்ந்து நின்று குரல் எழுப்பும் நாம், என்றாவது ரயில்களில் பயணச்சீட்டு இல்லையென ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெய ரையாவது யோசித்தது உண்டா?
– அனிச்சம் கனிமொழி
(முகநூல் பதிவு)
சென்னை வாழ் மக்களிடம் ஒரு கேள்வி…
Leave a Comment