சிதம்பரம், பிப்.14-அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் நடைபெற்ற, புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் அறக்கட்டளை சொற்பொழிவில், “புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பகுத்தறிவும், மொழி உணர்வும்” என்ற தலைப்பில் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் பேசிய தாவது:
தந்தை பெரியார் உரைநடையில் பேசிய கருத்து களை, பாரதிதாசன் கவிதையில் கூறினார். மூடநம்பிக்கை என்ற இருள் ஒழிய வேண்டுமானால், பகுத்தறிவு என்கிற சூரிய ஒளி தேவை. சூரியன் உதிக்கத் தொடங்கியதும், இருள்தானே நீங்குவது போல, பகுத்தறிவு நம் உள்ளத்தில் தோன்றினால் மூடநம்பிக்கை என்கிற இருள்தானே நீங்கிவிடும்.
“இருட்டறையில் உள்ளதடா உலகம்! – சாதி
இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே!
மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின்றாரே!”
– ஜாதி, மதம், ஒழிந்தால்தான் சமத்துவம் பிறக்கும், பெண்ணடிமை நீங்கும். பெண் கல்வி வளர்ந்தால்தான் ஜாதி, மத வியாதி நீங்கும். மதம் சீழ்பிடித்த நோய் போன்றது என்பதை பாரதிதாசன்,
“சிறுமை மதம் சாதி – இழி
சீழ்பிடித்த எண்ணம்”
புராண இதிகாசங்களைச் சாடும் கவிஞர்,
“பேதம் வளர்க்க பெரும்பெரும் புராணங்கள்
சாதி சண்டை வளர்க்கத்தக்க இதிகாசங்கள்”
– என்று கூறுகிறார். புராணங்களும் இதிகாசங்களும் ஜாதிச் சண்டையை வளர்க்கின்றன. சமீபத்தில், காஞ்சிபுரத்தில் வடகலை நாமம், தென்கலை நாமம் பிரச் சினை உண்டாகி நடுத்தெருவில் அடித்துக் கொண் டதைப் பார்த்தோம். இதனைத்தான் நம் புராணங்களும் இதிகாசங்களும் சொல்கின்றன.
“பழம் புராண வழக்கங்கள் யாவும்
இனிமேலும் விட்டு வைக்காதே
எடு துடைப்பத்தை…”
பழைய புராண பழக்கவழக்கங்களை துடைப்பத்தால் அடித்து விரட்ட வேண்டும் என்கிறார் பாரதிதாசன்.
“சஞ்சீவி பருவத்தின் சாரல்” என்ற நூலில் பகுத்தறிவில்லாத வாழ்க்கை சாறில்லாத சக்கை போன்ற வாழ்க் கையாகும் என்கிறார்.
மதத்தை ஒழிக்க வேண்டும் என்பதை,
“ஒரு மதமும் வேண்டாம் – தம்பி
உண்மை உடையாருக்கே
பெருமதங்கள் என்றும் – அந்த
பேய் பிடியாதிருத்தல் வேண்டும்.”
என்கிறார்.
பார்ப்பனர்கள், முன்னோர்கள்,
“நால் வருணங்கள் வித்திட்டார் நாட்டார்கள்”
– என்று ‘புரட்சிக்கவி’ என்ற நூலில் கூறுகிறார்.
‘கல்வியில்லாத பெண்கள் களர் நிலம்’ – என்று கூறி, பெண் கல்வியைப் பாடுகிறார். தந்தை பெரியார் பெண் களுக்கு சொத்துரிமை வேண்டும் என்றதை பாரதி தாசனும் தன் பாடல்களில் வலியுறுத்தியுள்ளார்.
“புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பகுத்தறிவும் – மொழி உணர்வும்” அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம்

Leave a Comment