கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பெரியார் கருத்துகளை எடுத்துக்கூறும் முயற்சிகளை குமரி மாவட்ட கழகம், திராவிட மாணவர் கழகம் செய்து வருகின்றது. குமரி மாவட்டம், தோவாளை ஊராட்சி ஒன்றியம், ஆரல்வாய்மொழி அருகேயுள்ள செண்பகராமன்புதூர் கிராமத்தில் உள்ள எம்.இ.டி. கல்வியியல் கல்லூரியில் உள்ள மாணவர்களுக்கு தந்தை பெரியாருடைய நூல்கள் வழங்கப்பட்டன. பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு, கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், துணைத் தலைவர் ச.நல்லபெருமாள், பொதுக்குழு உறுப்பினர் ஆரல்வாய்மொழி மா.மணி மற்றும் தோழர்கள் பங்கேற்று அனைத்து மாணவர் களுக்கும் பெரியாருடைய நூல்களை வழங்கினர். மாணவர்களும் பெரியாருடைய நூல்களை ஆர்வமுடன் வாங்கிப் படித்தனர். தொடர்ந்து பெரியாருடைய கருத்துக் களை தோழர்கள் பரப்புரை செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட கல்லூரி மாணவர்கள் மத்தியில் பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை

Leave a Comment