திருச்சி, பிப். 13- பன்னாட்டு சிறு தானிய ஆண்டு 2023அய் கொண்டாடும் வகையில் திருச்சியில் சிறுதானிய உணவுத் திருவிழா மத்தி யப் பேருந்துநிலையம் அருகிலுள்ள கலையரங் கத்தில் 09.02.2024 அன்று நடைபெற்றது.
சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள், பள்ளி மற் றும் கல்லூரி மாணவர் களுக்கிடையே ஏற்படுத்த வேண்டும் என்ற நோக் கில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்புத்துறை சார்பில் நடைபெற்ற இச்சிறுதா னிய உணவுத் திருவிழா வினை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப்குமார் துவக்கி வைத்தார்.
பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதுநிலை மருந்தியல் மாணவிகள் எம். நிசானா நஸ்ரின், ஏ. ஷிபானா பானு, கே. பிரியதர்ஷினி, ஜே. அய் னுல் ஆஷிகா, இளநிலை மருந்தியல் மாணவிகள் கே. ஸ்வேதா லெட்சுமி, எம். ஸ்டெரினா, ஆர் சஹானா நிஹார், என். கீர்த்திகா, எஸ். பிரவீனா மற்றும் மருத்துவ ஆய்வுக் கூட தொழில்நுட்ப மாணவிகள் கே. விஷ்ணு பிரியா, பி. தனலெட்சுமி, எஸ். அக்கிமா, டி. சுபா ஜாஷ்பின், ஏ. பார்வதி, டி. வீனா, ஆர். சிறீ ஜனனி, டி. விஜயலெட்சுமி, ஏ. கங்காதேவி, எஸ். திவ்யபிரியா ஆகியோர் நான்கு குழுக்களாக அரங்குகளை அமைத்தனர். கருப்பு கவுனி அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை மற்றும் தினை போன்ற சத்து நிறைந்த சிறுதானியங்களைக் கொண்டு உணவுகளை தயாரித்து அவைகள் எந் தெந்த உடலுறுப்புக்க ளுக்கு பயனளிக்கும் என் பதை பார்வைக்கு வைத்தி ருந்தனர். திருச்சி மாவட் டத்திலுள்ள பள்ளி கல்லூரி மட்டுமல்லாது சுய உதவிக்குழுக்கள் மற்றும் உணவக உரிமை யாளர்கள் பங்கேற்ற 60க்கும் மேற்பட்ட அரங் குகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பெரியார் மருந்தியல் கல் லூரிக்கு இரண்டாமிடத் தையும் பரிசுத்தொகை யாக ரூபாய் நான்காயிரத் தினையும் பேராசிரியை எஸ். பிரியதர்ஷினி மற் றும் மாணவ குழுவின ருக்கு வழங்கினார்.
வெற்றி பெற்ற மாண விகளுக்கு கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர் முனைவர் இரா. செந் தாமரை, பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டி வாழ்த்துக் களை தெரிவித்தனர்.
இக்கண்காட்சியினை பெரியார் மருந்தியல் கல் லூரியின் முதுநிலை மருந்தியல் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப ஆய்வுக்கூட மாணவிகள் பார்வையிட்டனர் என் பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக “பெண் குழந் தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறுதானிய உணவுத் திருவிழாவில் பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு பரிசு

Leave a Comment