சென்னை, பிப். 13- தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (12.02.2024) சென்னை, கிண்டி, தமிழ் நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக கூட்டரங்கில் கரோனா பெருந்தொற்று காலத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்த 977 செவிலியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கி விழாவில் உரையாற்றியபோது அவர் தெரிவித்ததாவது,
2020ஆம் ஆண்டு கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நோயாளி களின் நலன்கருதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவ மனைகள் மற்றும் கோவிட் தனிமைப் படுத்தும் மய்யங்களில் 4,570 செவிலியர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக ஒப்ப ளிப்பு செய்து ஆணை வழங்கப்பட்டது. இப்பணியி டங்களை நிரப்புவதற்கு சுமார் 8,136 செவிலியர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் 3,780 செவிலியர்கள் மட்டும் பெருந்தொற்று காலத்தில் தற்காலிக செவிலியர்களாக ஒப்பந்த அடிப்படை யில் பணியில் இணைந்தனர். பணியில் இணைந்த செவிலியர்களில் 3,184 செவிலியர்கள் மட்டும் தொடர்ந்து பணி புரிந்து வந்தனர்.
கோவிட்- 19 பெருந்தொற்று படிப் படியாக குறைந்த காரணத்தினால் கடந்த 31.03.2022 மற்றும் 31.12.2022 ஆகிய தேதிகளில் பணிவிடுவிப்பு செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் மீண்டும் தங்களுக்கு பணி வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் இவ் வழக்கில் உயர்நீதிமன்றம் மனுதாரர் களான 977 பணிவிடுவிப்பு செய்யப் பட்ட தற்காலிக செவிலியர்களுக்கு மீண்டும் பணிநியமனம் வழங்கிட உத்தரவிடப்பட்டது. தற்போது மேற் கண்ட செவிலியர்களுக்கு பணிநியமனம் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங் கியுள்ளது. எனவே மனுதாரர்களான 977 பணிவிடுவிப்பு செய்யப்பட்ட தற் காலிக செவிலியர்களுக்கு மீண்டும் பணிநியமனம் வழங்கிட ஏதுவாக 10.02. 2024 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் விருப்பப்பட்ட பணியிடங் களை தேர்வு செய்ய கலந்தாய்வு மேற் கொள்ளப்பட்டு தற்போது பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவப் பணியாளர்கள் நலனுக் காக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் கரோனா காலத்தில் தற்காலிகமாக பணிபுரிந்த மருத்தவர் மற்றும் செவிலியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஊக்க மதிப்பெண் வழங்கப்பட்டு அரசு பணியில் சேர முன்னுரிமை அளிக்கப் பட்டுள்ளது. இந்த ஆட்சி பொறுப் பேற்ற பிறகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், கரோனாவில் பணிபுரிந்த மருத்து வர் உள்ளிட்ட 1,05,168 மருத்துவ பணியாளர்களுக்கு ரூ.197 கோடி செலவில் ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்சி பொறுப்பேற்றபிறகு, மருத்துவத்துறையில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு இது வரை 1,884 பணி ஆணைகள் வழங்கப் பட்டுள்ளது. மேலும் கடந்த 06.02.2024 அன்று மருத்துவப் பணியாளர் தேர் வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,021 புதிய மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் மூலம் விரைவில் கிராம சுகாதார செவிலியர்கள் 2,250, மருந்தாளுநர்கள் 986, சுகாதார ஆய்வாளர்கள் 1,076 மற்றும் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் 798 என 5,100 பணியிடங்கள் நிரப்படு வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன.
மேலும் 1,257 மருத்துவ பணியிடங் களுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட உள்ளன. மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடமாற்றங்களுக்கு வெளிப்படையாக கலந்தாய்வு நடத் தப்பட்டு வருகிறது.
மேலும் அரசாணை எண் 293 & 354 மூலம் அரசு மருத்துவர்கள் ஊக்கப்படி களுடன் கூடிய பணப்பலன் தருவதில் இருந்த பாரபட்சங்கள் நீக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. மருத்துவ சேம நல நிதி கடந்த அரசில் ரூ.50 இலட்சமாக இருந்தது, அது தற்போது முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டு 12 குடும் பங்களுக்கு மருத்துவ சேமநலநிதி ரூ.1 கோடி என்கின்ற வகையில் 5 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னமும் 7 குடும்பங்களுக்கு மிக விரைவில் மருத்துவ சேமநல நிதி வழங்க ப்படும். பல்வேறு புதிய ஆரம்ப சுகாதார நிலை யங்கள், துணை சுகாதார நிலையங்கள் புதியதாக திறக்கப்பட்டு பயன்பாட் டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மருத்துவர் மற்றும் செவிலியர் குடி யிருப்புகள் கட்டப்பட்டு பயன்பாட் டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தூய்மை பணியாளர்களின் பயன்பாட் டிற்கென “தனி அறை“ அமைத்து தரப் பட்டுள்ளது. தேசிய நலவாழ்வு குழு மத்தின் கீழ் சுமார் 47,000 ஒப்பந்த பணி யாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
முதலமைச்சர் அவர்கள் உத்திர விட்டதன் அடிப்படையில் ஒப்பந்தப் பணியாளர்களுக்கான ஊதியம் கீழ்க் கண்டவாறு உயர்த்தப்பட்டு ள்ளது. சித்தா மற்றும் இந்திய முறை மருத்து வர்கள் பெற்று வந்த பழைய மாத ஊதியம் ரூ.26,000- தற்போது இந்த ஆட்சி பொறுப்பேற்றபிறகு அவர்க ளுக்கு உயர்த்தி வழங்கப்பட்டு வரும் மாத ஊதியம் ரூ.34,000- பல் மருத்து வர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத ஊதியம் ரூ.26,000- தற்போது வழங்கப் பட்டு வரும் மாத ஊதியம் ரூ.34,000- தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப் பாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத ஊதியம் ரூ.16,500- தற்போது உயர்த்தி வழங்கப்பட்டு வரும் மாத ஊதியம் ரூ.21,000- தாய் சேய் நல அலுவலர்களுக்குவழங்கப்பட்டு வந்த மாத ஊதியம் ரூ.15,000- தற்போது வழங்கப்படும் மாத ஊதியம் ரூ.19,000- ஒப்பந்த செவிலியர்களுக்கு வழங்கப் பட்டு வந்த மாத ஊதியம் ரூ.14,000- தற்போது வழங்கப்படும் மாத ஊதியம் ரூ.18,000- மருந்தாளுநர்களுக்கு வழங் கப்பட்டு வந்த மாத ஊதியம் ரூ.12,000- தற்போது வழங்கப்படும் மாத ஊதியம் ரூ.15,000- துணை செவிலியர்களுக்கு வழங்கப்பட்ட மாத ஊதியம் ரூ.11,000- தற்போது வழங்கப்படும் மாத ஊதியம் ரூ.14,000- இயன்முறை சிகிச்சையாளர் களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத ஊதி யம் ரூ.10,000- தற்போது வழங்கப்படும் மாத ஊதியம் ரூ.13,000- ஆய்வக நுட்பு நர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத ஊதியம் ரூ.10,000- தற்போது வழங்கப் படும் மாத ஊதியம் ரூ.13,000- பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப் பட்ட மாத ஊதியம் ரூ.6,500- தற்போது வழங்கப்படும் மாத ஊதியம் ரூ.8,500- என மாத ஊதியம் உயர்த்தி வழங்கப் பட்டு வருகிறது. தாய் சேய் நலப்பணி யாளர்களுக்கு (ஸிசிபி) மாதம் சொற்பத் தொகையாக ரூ.1,500 வழங்கப்பட்டு வந்தது, தற்போது பத்து மடங்காக உயர்த்தப்பட்டு மாதம் ரூ.15,000- வழங் கப்பட்டு வருகிறது. மேலும் மலைக் கிராமங்கள் மற்றும் தொலைதூர கிராமங்களில் பணிபுரியும் 2,650 ஆஷா பணியாளர்களுக்கு சொற்பத் தொகையே வழங்கப்பட்டு வந்தது, தற்போது மாதம் ரூ.5,100- ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார்.
கரோனா காலத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்த 977 செவிலியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமன ஆணைகள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்!
Leave a Comment