சதுரகிரி கோயிலுக்குச் சென்ற பக்தர் உயிரிழப்பு
சதுரகிரி, பிப்.13- சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோயில் வழிபாடு செய்யச் சென்ற பக்தர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், சிறீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலையின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இங்கு அமாவாசை, முழு நிலவு என மக்கள் வழிபாடு செய்வதற்கு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும். அதே சமயம் மழை நாட்களில் மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படு வதில்லை.
இந்நிலையில் 11.2.2024 அன்று வழி பாட்டிற்காக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி மலைக்கு வருகை புரிந்தனர்.
அப்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சிவாஜி என்பவர் கோயிலுக்கு செல்லும் வழியில் பச்சரிசி பாறை என்னு மிடத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரி ழந்தார். இதையடுத்து இது குறித்து தகவல் அறிந்து நிகழ்வு இடத்திற்கு சென்ற காவல் துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிகழ்வு பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.