ஆவடி, பிப். 13- ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 11.2.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு ஆவடி பெரியார் மாளி கையில் மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் மாவட்ட செயலாளர் க.இளவர சன் வரவேற்புரையுடன் பெரியார் பிஞ்சு சமத்துவமணி கடவுள் மறுப்பு முழக்கத்துடன் நடைபெற்றது.
முதலில் மறைந்த மேனாள் திராவிடர் கழக செயலவைத் தலை வர் க.அறிவுக்கரசு அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து இரண்டு நிமிடம் அமைதிகாத்து மரியாதை செலுத்தினர்.
இரண்டாவது தீர்மானமாக விடுதலை சந்தா சேர்க்கும் பணியை தொடர் பணியாக செய்வது என் றும் திரட்டிய சந்தாக்களை மார்ச் மாதம் அன்னை மணியம்மையார் பிறந்த நாளன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் அளிப்பது. மூன்றாவது தீர்மானம் பெரியார் 1000 காணொலி தேர்வை சிறப் பாக நடத்துவது என்றும் அது குறித்து ஆவடி மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் கார்த்திக் கேயன் பள்ளிகளை அணுகுவது குறித்தும் கணினி மற்றும் அலை பேசியில் இயக்குவது குறித்தும் பயிற்சி அளித்தார்.
இறுதியில் ஆவடி அரசு மருத்து வமனையில் கட்டப்பட்டு வரும் கோயில் பணியை நிறுத்த மாவட்ட கழக பொறுப்பாளர்கள் சம்பந்தப் பட்ட அதிகாரிகளை நேரில் சந் திக்க முடிவு செய்யப்பட்டது.
நிகழ்வில் பெரியார் சுயமரி யாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, ஆவடி மாவட்ட கழக மகளிரணி தலைவர் பூவை செல்வி, செயலாளர் த.லலிதா, துணை தலைவர்கள் மு. ரகுபதி, வை.கலையரசன், துணை செயலாளர்கள் உடுமலை வடி வேல், பூவை தமிழ்ச்செல்வன், ஆவடி நகர தலைவர் முருகன், துணை தலைவர் சி.வச்சிரவேலு, பட்டாபிராம் பகுதி தலைவர் இரா.வேல்முருகன், மதுரவாயல் பகுதி தலைவர் சு.வேல்சாமி, பூந்த மல்லி நகர தலைவர் பெரியார் மாணாக்கன், செயலாளர் தி.மணிமாறன், ஒன்றிய செயலாளர் சு.வெங்கடேசன், ஆவடி மாவட்ட திராவிடர் கழக மகளிர் பாசறை செயலாளர் அன்புச் செல்வி, திரு நின்றவூர் பகுதி செயலாளர் கீதா ராமதுரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கலைவேந்தன், திரு முல்லைவாயல் பகுதி செயலாளர் ரவீந்திரன், பெரியார் பெருந் தொண்டர் அ.வெ.நடராசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் ஜெயராமன், துணை செயலாளர் சுந்தர்ராஜன், திருமுல்லைவாயல் இளைஞரணி அமைப்பாளர் சிலம்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.