வேலூர், பிப். 13- 9.2.2024 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில் வேலூர் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ சாலையில் நகர திராவிடர் கழகத்தின் சார்பாக “தமிழ்நாடு மக் களின் உரிமையும் கட மையும்” என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் வி.இ.சிவகுமார் தலை மையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் விஸ்வநாதன் வரவேற் புரை நிகழ்த்தினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் இ.தமிழ் தரணி இணைப் புரை வழங்கினார்.
பகுத்தறிவாளர் கழகம் மாநகரச் செயலா ளர் தி.க. சின்னதுரை துவக்க உரையாற்றினார். மாவட்ட காப்பாளர் வி. சடகோபன் பெரியாரின் கொள்கைகளை இங்கு மட்டுமல்லாது வடநாட் டிலும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் 91 வயதிலும் ஓய்வில்லாமல் தமிழ்நாடு மக்களுக்காக உழைக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் மக்கள் பணியை பற்றி உரையாற் றினார். சிறப்புரையாற்றிய தலைமை சொற் பொழி வாளர் இரா. பெரியார் செல்வன் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள் இன்றள வும் மக்களுக்கு தேவை என்பதைப் பற்றியும், நமது முதலமைச்சர் கூறிய கருத்தான என்னை வழிநடத்துவது பெரியார் திடல் தான் என்ற கருத்தை தெரிவித்தது டன், மோடி அரசின் வஞ்சகப் போக்கினை கண் டித்துப் பேசினார். இறுதி யாக மாநகரச் செயலாளர் அ.மொ.வீரமணி நன்றி யுரை ஆற்றினார்.
பெரியார் பெருந் தொண்டர் இரா.கணே சன், பொதுக்குழு உறுப் பினர் க.சிகாமணி, மாந கர பகுத்தறிவாளர் கழக தலைவர் துரைசாமி, பொதுக்குழு உறுப்பினர் தா.நாகம்மாள், சத்துவாச் சாரி மகளிரணி க.கன கம்மாள், மாநகர மகளி ரணி தலைவர் வீ.பொன் மொழி, குடியாத்தம் நகர திராவிடர் கழக தலைவர் சி.சாந்தகுமார், மாவட்ட இளைஞரணி தலைவர் பொ.தயாளன், மாவட்ட இளைஞரணி அமைப்பா ளர் மு, சீனிவாசன், திமிரி இளைஞரணி கு.பாலாஜி, மாவட்ட மாணவர் அணி தலைவர் இனியன். மாவட்ட மாணவர் கழக துணைச் செயலாளர் சி.சங்கநிதி மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.