சோழிங்கநல்லூர், பிப். 13- சோழிங்கநல்லூர் மாவட்டக் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 4.2.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் த.ஆனந்தன் அலுவலகத்தில் நடை பெற்றது.
இந்தக் கூட்டத்தில் சுண்ணாம்புக் குளத்தூர் விடுதலை நகரில் செயல் பட்டுவரும் நூலகத்தைப் புதுப்பித்து, அங்கு நமது மாவட்டக் கழகத்தின் அலுவலகம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. அங்கு பகுத்தறிவுப் பகல வன் தந்தை பெரியார் அவர்களின் மார்பளவு சிலையை நிறுவ வேண் டும் எனவும், அந்தச் சிலையை அமைக்கும் செலவை த. ஆனந்தன் ஏற்றுக்கொள்வதாகவும் மகிழ்ச்சியுடன் அறிவித்தார்கள்.
நூலகத்தைப் புதுப் பிக்கும் செலவை மற்ற மாவட்டத் தோழர்கள் பகிர்ந்து கொள்வது எனவும் பற்றாக்குறை ஏற்படுமானால் காப்பா ளர் ஆர்.டி.வீரபத்திரன் ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்தார்கள்.
இந்தக் கூட்டத்தில் கடந்த 27.1.2024 அன்று மடிப்பாக்கத்தில் நடை பெற்ற தந்தை பெரியார் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவாகவும் அவரின் இறுதி உரை தெருமுனை கூட்டத் திற்கு ஒத்துழைப்பு கொடுத்து மேடை, இருக்கை மற்றும் ஒலி – ஒளி அமைத்துக் கொடுத்த 187 வது வட்ட திமுக செயலாளர் எம்.ஆர்.ஜெய் அவர்களுக்கும், காங்கிரஸ் பேரியக்கத் தைச் சேர்ந்த செந்தில் நாதன், ஸ்டார் மனோக ரன், சோழிங்கநல்லூர் மாவட்ட திமுக அவைத் தலைவர் அரிகிருஷ்ணன் அவர்களுக்கும், எங்க ளுக்கு எல்லா வழியிலும் ஒத்துழைப்பினை நல்கிவரும் திமுக நிர்வாகி தயாளன் அவர்களுக்கும், இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த 187 வட்ட மாமன்ற உறுப்பி னர் ஷெர்லிஜெய் அவர் களுக்கும், 188ஆவது மாமன்ற உறுப்பினர் சமீனா செல்வம் அவர் களுக்கும் மற்றும் விசிக பெருமாள் அவர்களுக் கும். மடிப்பாக்கம் சிபிஎம் செயலாளர் எஸ் பாமா அவர்களுக்கும் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இறுதியாக கூட்ட வரவு-செலவு படிக்கப் பட்டு கூட்டம் முடிக்கப் பட்டது.
இந்தக் கலந்துரையா டலில் கலந்து கொண்ட வர்கள் காப்பாளர் ஆர். டி.வீரபத்திரன், மாவட் டத் தலைவர் வேலூர் பாண்டு,விஜய் மாவட்டச் செயலாளர் உத்தமன் ராஜ், துணைத் தலைவர் தமிழ் இனியன், ப.க. தலை வர் த.ஆனந்தன், மாவட்ட பக அமைப்பாளர் பி.சி. ஜெயராமன், ப.க. துணைத் தலைவர் கே.ராஜா, மாவட்ட இளைஞரணி தலைவர் மு நித்தியானந் தன், கோவிலம்பாக்கம் கிளை செயலாளர் வே மணிகண்டன், மாவட்ட மகளிர் அணித்தலைவர் ஜெ.தேவி சக்திவேல் ஆகி யோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.