வேலூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
அன்னை மணியம்மையார் பிறந்த லத்தேரியில் மார்ச் 8இல் விழா
வேலூர், பிப். 13- 9.2.2024 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு வேலூரில் ‘சுயமரி யாதை சுடரொளி’ பழனியப்பன் நினை வரங்கத்தில் வேலூர் மாவட்ட திரா விடர் கழக இளைஞரணி, மாவட்ட திராவிட மாணவர் கழகம் கலந்துரை யாடல் கூட்டம் மாவட்ட இளைஞரணி தலைவர் பொ. தயாளன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி செயலாளர் இ.தமிழ் தரணி வரவேற் புரை நிகழ்த்தினார். மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் மு.சீனிவாசன், மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர் இர.க.இனியன், மாணவர் கழக வி.சி.சங்கநிதி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் சிறப்புரை யாற்றினார். சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வம், பகுத்தறிவாளர் கழகம் மாவட்ட தலைவர் மருத்துவர் ஜெகன் பாபு, திராவிடர் கழக – மாவட் டத் தலைவர் வி.இ. சிவக்குமார், மாவட்ட காப்பாளர் வி.சடகோபன் ஆகியோர் இளைஞரணி, மாணவர் கழகம் வலுப்படுத்துவதற்கான ஆலோ சனைகள் வழங்கினார்கள். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.
திராவிடர் கழக செயலவை தலைவர் சுயமரியாதை சுடரொளி மானமிகு சு. அறிவுக்கரசுவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலும், வீரவணக்கமும் செலுத்தப் பட்டது
3.2.2024 அன்று கடலூரில் நடந்த தலைமை செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை சிறப்பாக செயல் படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களால் திராவிடர் கழக செயலவைத் தலைவராக நியமிக்கப்பட்ட வழக்கு ரைஞர் வீரமர்த்தினி அவர்களுக்கு இந்த கூட்டம் பாராட்டை தெரிவித் துக் கொள்கிறது.
24.02.2024 அன்று சென்னையில் நடைபெறும் மாநில இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டத்திலும் மாலை நடைபெறும் ஆர்ப்பாட்டத் திலும் கலந்து கொள்வதென தீர் மானிக்கப்பட்டது.
ஒன்றிய மோடி அரசின் சூழ்ச்சிகளை, வஞ்சகப் போக்கை, உரிமை பறிப்பை கண்டித்து தெருமுனை கூட்டங்கள் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மார்ச்-8 அன்னை மணியம்மையாரின் பிறந்த நாள் அன்று அம்மா பிறந்த ஊரான லத்தேரியில் மகளிரணி மற்றும் மகளிர் பாசறை சார்பில் சிறப்பான கூட்டம் நடத்துவதென தீர்மானிக்கப் பட்டது.
திராவிடர் இயக்கத்தில் 50 ஆண்டு கள் தடம் பதித்து நிறைவு பெற்ற வேலூர் மாவட்ட கழக காப்பாளர்கள் வி.சடகோபன்-ச.ஈஸ்வரி இணையர் களின் 50 ஆம் ஆண்டு மணநாள் விழா நிகழ்ச்சி 25.2.2024 அன்று திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் வாழ்த்துரை யோடு குடியாத்தத்தில் நடைபெறுகிறது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
வேலூர் மாவட்ட திராவிட மாண வர் கழகம் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இர.க.இனியன் –திராவிட மாணவர் கழக மாவட்ட தலைவர்
இ.அ.மதிவதனி — திராவிட மாணவர் கழக மாவட்ட செயலாளர்
வி.சி.தமிழ்நேசன் — திராவிட மாணவர் கழக மாவட்ட துணைத் தலைவர்
வி.சி.சங்கநிதி — திராவிட மாணவர் கழக மாவட்ட துணைச் செயலாளர்
வீ.தமிழ்செல்வன் — திராவிட மாணவர் கழக மாநகர தலைவர்
அ.ஜெ.ஓவியா – – திராவிட மாணவர் கழக மாநகர செயலாளர்
திராவிட மாணவர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்ட தோழர்கள்
புவன் – காட்பாடி
எஸ்.ஜமான் – விருதம்பட்டு
எஸ்.ஆஷீன் – விருதம்பட்டு
இக்கூட்டத்தில் மாவட்ட கழக காப் பாளர் ச.கலைமணி, மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவர் பழ.ஜெகன்பாபு, மாவட்ட திராவிட மகளிர் பாசறை அமைப்பாளர் தி.அனிதா, மாநகர பகுத் தறிவாளர் கழக செயலாளர் தி.க.சின்ன துரை, குடியாத்தம் திராவிடர் கழக நகர தலைவர் சி.சாந்தகுமார், பொதுக் குழு உறுப்பினர் க.சிகாமனி, மாநகர திராவிடர் கழக செயலாளர் அ.மொ. வீரமணி, கந்தனேரி பொ.இரவீந்திரன், பா.திலகவதி, ஒரத்தநாடு வினோத் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.