1972இல் ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வு அலவன்ஸ் படியை உயர்த்தி வழங்கியது. ஒன்றிய அரசு. அதன்படி மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்களாலும் கோரிக்கை வைக்கப்பட்டது. உடனே முத்தமிழறிஞர் கலைஞர் உயர் அதிகாரிகளை கூட்டி விவாதித்து ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு ஈடாக ஊதிய உயர்வை மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்கினார். 8.6.2023இல் ரயில்வே துறையில் 14 லட்சம் ஊழியர் பணியிடம் காலியாக உள்ளது என்ற புள்ளி விவரம் வெளியானது.
பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ் ஹிந்து மத வெறியுடன் மோடி பஜனை செய்து கொண்டு இருக்கிறார். கருப்புப் பணத்தை மீட்கவில்லை. கட்சிக்காரர்களுக்கு சலுகை, அதானி, அம் பானியின் அசுர வளர்ச்சி, வேலை இல்லாத் திண்டாட்டம் – பொது மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். அதைப்பற்றி யெல்லாம் ஆரிய கலாச்சார அரசு கண்டு கொள்வதே இல்லை. விளையாட்டு வீராங்கனைகளை மோடியின் ஆதரவாளர்கள் பாலியல் வன் கொடுமை செய்கிறார்கள். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்பதுபோல் சொல்லி விட்டு ஏமாற்றுகிறார்கள்; கொல்லுகிறார்கள். தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். தலைவரைப் போன்று பீகார் மாநிலத்தைச் சார்ந்தவரான ஆளுநர் செயல்படுகிறார்.
ஓட்டுப் போட்ட மக்களுக்கு நாம் நீதிமன்றம் மூலம் தான் நன்மை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. பொய் களால் புனையப்பட்ட ஆரிய, பார்ப்பன மதமான ஹிந்து மதத்தைத் தூக்கிப் பிடிக்கும் பிரதமர் மோடி, மக்கள் பிரதிநிதிகள் சொல்வதையோ, இந்திய அரசமைப்புச் சட்டம் சொல்வதையோ கேட்கமாட்டேன் – அம்பானி, அதானி, ஆரிய கலாச்சார பணக்காரர்கள், சொல்வதைத் தான், கேட்பேன் என்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் சொல்வதை கேட்க முடியாது என்ற முடிவோடு ஆரிய கலாச்சார அரசியல் ரவுடித்தனத்தை மவுனமாக அரங்கேற்றிக் கொண்டு வருகிறார். தென் இந்தியா மக்களை அடிமையாகவே நடத்தும் வகையில் பொய்யான இந்து மதத்தைக் காட்டி அரசியல் செய்கிறார்கள்.
மதவெறியை காட்டி தென் இந்திய மக்களிடம் ஓட்டுப் பெற முடியாது என்பதை மோடிக்கும் அவர் சார்ந்த பாசிச அமைப்புகளுக்கும் உணர்த்த வேண்டிய நேரம் இது. ஆகவே மக்களே விழிப்புடனிருங்கள்.
– மரு. ச. செல்வராஜ்
தூத்துக்குடி