குடந்தை (கழக) மாவட்டம், பட்டீஸ்வரம், பெரியார் பெருந்தொண்டர் க.அய்யாசாமி அவர்களின் துணைவியார் அ.சவுந்தரவள்ளி அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு (23.11.2023) நாளை யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.2000 குடும்பத்தினர் சார்பாக வழங்கப்பட்டது.
– – – – –
தூத்துக்குடி மாவட்டத் திராவிடர் கழக மகளிரணி மேனாள் அமைப்பா ளரும், பணி நிறைவு பெற்ற ஆசிரியரும், தனது மறைவுக்குப் பின் தன் உடலைத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்புக்குக் கொடை யாக வழங்கியவருமான “சுயமரியாதைச் சுடரொளி” சிவகளை இரா.கஸ்தூரிபாய் அவர்களின் 5ஆம் ஆண்டு (26.11.2023) நிறைவு நினைவு நாளை முன்னிட்டு நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு உணவிற்காக ரூ.3000 நன்கொடையாக மா.பால்ராசேந்திரம், வழக்குரைஞர் பா.இராசேந்திரன் வழங்கினர்.