ராய்ப்பூர், அக்.8- சத்தீஸ்கர் மாநிலம் காங்கேர் மாவட்டத்தில் மாநில அரசு சார்பில் 6.10.2023 அன்று நடைபெற்ற நிகழ்ச் சியில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அப் போது, அவர் பேசிய தாவது:
ஒன்றிய பாஜக அர சுக்கு ஏழைகள் மீதோ, நடுத்தர வர்க்கத்தினர் மீதோ அக்கறை கிடை யாது; பணக்காரர்களுக்காக செயல்படும் அரசாக உள்ளது.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந் தால், பீகாரில் நடத்தப் பட்டதைப் போல இம்மா நிலத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் படும்.
பீகார் ஜாதிவாரி கணக்கெடுப்பில் அங் குள்ள 84 சதவீத மக்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியின சமூகங்களைச் சேர்ந் தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
ஆனால், அரசின் உயர் பதவிகளில் இந்த 84 சதவீத மக்களின் பலம் எந்த அளவில் இருக்கிறது? உயர் பதவிகளை வகிக்க அவர்களுக்கு உரிமை இல்லையா?
பிரதமர் மோடி அளிப் பதெல்லாம் வெற்று வாக்குறுதிகளே. நாட்டின் விவசாயிகளை பொரு ளாதார ரீதியில் வலு விழக்கச் செய்துள்ளது பாஜக அரசு. விவசாயிகள் நாளொன்றுக்கு ரூ.27 மட்டுமே வருவாய் ஈட்டுகின்றனர். ஆனால், அதானி மற்றும் இதர பெரும் தொழிலதிபர்கள் தினமும் ரூ.1,600 கோடி சம்பாதிக்கின்றனர்.
நாட்டின் சொத்து களை தங்களது பணக்கார நண்பர்களிடம் ஒப்ப டைத்து, அவர்கள் மூலம் கட்சிக்கு பணத்தை மடை மாற்ற விரும்புகிறது பாஜக.
2 விமானங்கள் கொள் முதலுக்கு தலா ரூ.8,000 கோடி, புதிய நாடாளு மன்ற கட்டடத்துக்கு ரூ.20,000 கோடி, பன் னாட்டு மாநாட்டு வளா கத்துக்கு ரூ.27,000 கோடி என்று செலவழிக்கும் பிரதமர் மோடி, பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு பணமில்லை என்கிறார்.
பழைய ஓய்வூதிய திட் டம், ஜாதிவாரி கணக் கெடுப்பு குறித்து நாம் பேசினால், மதம் உள் ளிட்ட உணர்வுபூர்வ பிரச் சினைகளை எழுப்பி, மக்களை திசை திருப்புகின் றனர் என்று குற்றம் சாட்டினார் பிரியங்கா.