ராமேசுவரம் ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ். பாரதி பகிரங்க குற்றச்சாட்டு
ராமேசுவரம், பிப்.12 தமிழ்நாட்டு மீனவர்களைத் துன்புறுத்தும் இலங்கைக்கு பிரதமர் மோடி உதவி செய்கிறார். ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றஞ்சாட் டினார்.
மீனவர்கள் கைதுக்கு எதிராக ராமேசுவரத்தில் நடந்த ஆர்ப் பாட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:
2014 மக்களவைத் தேர்தலில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாடு மீனவர்கள் ஒருவர் கூட கைதாக மாட்டார்கள், அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மாறாக கடந்த 10 ஆண்டுகளில் 3076 மீன வர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகள் இலங்கை வசம் உள்ளதால் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். இதுகுறித்து தி.மு.க., உறுப்பி னர்கள் மக்களவையில் விவாதிக்க அனுமதி மறுக்கின்றனர்.
மோடி அரசு தேர்தலில் வீழ்வது உறுதியாகி விட்டது. இதனால் தேர்தல் தேதியை தள்ளி வைத்து புதுப்புது திட்டங் களை அறிவிக்க உள்ளனர். மார்ச் 6 வரை ஒன்றிய அரசுக்கு அதி காரம் உள்ளது. அதற்குள் மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் பல முறை கடிதம் எழுதியும், கண்டு கொள்ளவில்லை. இவ்வாறு ஆர்.எஸ். பாரதி பேசினார்.