தந்தை பெரியார் கூறியது போல பெண்கள் பொருளாதாரத்தில்
தன்னிறைவு பெற்றவர்களாக இருப்பதுதான் பெண்ணுரிமைக்கான அடித்தளம்
தர்மபுரி, அக்.8- தருமபுரி மருத்துவக் கல்லூரி கலையரங்கில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில், மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வரவேற்புரையுடன் நடை பெற்ற நிகழ்ச்சியில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலை ஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளி களுக்கு வங்கி பற்று அட்டையை வழங்கி பேசியதாவது,
தமிழ்நாடு முதல் அமைச்சர் “ஆணுக்கிங்கே பெண் நிகர்” என்னும் சமத்துவப் பாதையில் பெண்களின் முன்னேற்றத்திற்கென எண்ணற்ற திட் டங்களை அறிவித்து, அவற்றை சிறப் பாக செயல்படுத்தி வருகின்றார். பொதுமக்களின் அடிப்படை தேவை களை பூர்த்தி செய்யவும், வாழ்வாதா ரத்தை முன்னேற்றவும், வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.
ஒட்டுமொத்த இந்தியாவும்…
தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கிடும் அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் முதலமைச்சர் அவர்கள் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில் தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகப் பெரிய திட்டமாகவும், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மகளி ருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கி டும் கலைஞர் மகளிர் உரிமைத் திட் டத்தை காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.
1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், ஒட்டு மொத்த இந்தியாவும் திரும்பி பார்க்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப் பட்டு உள்ளது.
தற்போது தருமபுரி மாவட்டத்தில் இவ்விழாவின் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், 500 பயனாளி களுக்கு இன்றைய தினம் வங்கி பற்று அட்டைகள் வழங்கப்படவுள்ளது. இத்தருமபுரி மாவட்டத்தில் தான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களை முதன்முதலில் தொடங்கிவைத்தார். தற்போது நமது தமிழ்நாடு முதல மைச்சர் அவர்கள் இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை இத்தருமபுரி மாவட்டத்தில் தான் தொடங்கி வைத்தார்கள். தற் பொழுது இத்திட்டத்தின் கீழ் பயனாளி களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங் கப்பட்டு வருகிறது.
பல்வேறு திட்டங்கள்
இம்மாபெரும் திட்டத்தை பின் பற்றி அண்டை மாநிலங்களான தெலங் கானா, கருநாடகா உள்ளிட்ட மாநிலங் களில் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுவது குறித்தான வாக்குறு திகள் வழங்கப்பட்டு வருகின்றன. பெண்களின் முன்னேற்றத்திற்கென முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை தொடர்ந்து தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
தந்தை பெரியார் அவர்கள் பெண் ணுரிமை மற்றும் பெண்களின் முன் னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகள் என்ன என்ற கருத்தை சொல்லி இருக் கிறார்கள். பெண்கள் முன்னேற்றத்துக் கான அந்த முட்டுக்கட்டைகளை நம் முடைய அரசு எப்படி அகற்றி வருகிறது என்பதை இங்கு சொல்ல விரும்பு கின்றேன். பெண்கள் முன்னேற்றம் கலாச்சார ரீதியாக, சட்ட ரீதியாக, பொருளாதார ரீதியாக என மூன்று வழிகளில் தடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மூன்று தடைகளையும் நீக்கினால் போதும் பெண்கள் சுதந்திரமாக வாழ் வதோடு, முன்னேற்றமடைய முடியும் என்று தந்தை பெரியார் அவர்களே சொல்லியிருக்கிறார்கள்.
கட்டுப்பாடுகளை நீக்கி…
தந்தை பெரியார் அவர்கள் பணக் காரர் -ஏழை அடிமைத்தனத்தை விட, மேல் ஜாதி-கீழ் ஜாதி என்ற அடிமைத் தனத்தை விட, மிகவும் மோசமானது பெண் அடிமைத்தனத்தை கலாச்சார ரீதியான தடை என்று சொல்லியிருக்கிறார்கள். பெண் அடி மைத்தனமான பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, படிக்கக் கூடாது, வேலைக்கு செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை நீக்கி அவர் களை முன்னேற்ற பாதையில் அழைத்து சென்றது தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசாகும்.
இரண்டாவதாக பெண்களுக்கு இருந்த சட்ட ரீதியான தடை என்பது, ஒரு தாய் வயிற்றிலே பிறந்தாலும் தந்தையுடைய சொத்தில், பாட்டனார் சொத்தில் பெண்களுக்கு உரிமை இல்லை என்ற நிலை. இந்நிலையை மாற்றும் விதமாக, பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என்று நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சட்ட திருத்தத்தை கொண்டு வந்ததன் காரணமாக இன் றைக்கு எல்லா பெண்களுக்கும் சொத் தில் சம உரிமை கிடைத்திருக்கின்றது.
அறிவுக்கும் ஆற்றலுக்கும்
அடுத்ததாக பொருளாதார ரீதி யான தடை என்பது ஒரு பெண் சிறுமி யாக இருக்கும் பொழுது பொருளாதார ரீதியாக, பணத்திற்காக தனது அப்பா, அம்மாவை எதிர்பார்க்க வேண்டும். அந்த பெண் வளர்ந்து பணத்திற்காக கணவனை எதிர்பார்க்க வேண்டும். அந்தப் பெண், வயது முதிர்ந்த காலத்தில் தனது மகனையோ, பேரனையோ எதிர்பார்த்திருக்கும் நிலைமை. இந்த நிலைமையை மாற்றி பெண்களும் ஆண்களுக்கு சமமாக வளர வேண்டு மானால், ஆண்களைப் போல தாங்கள் விரும்பும் கல்வியைக் கற்று, தங்கள் அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்ற வேலை யில் சேர வேண்டும்.
எனவேதான் நமது தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றது. “புதுமைப் பெண்” திட்டத்தின் மூலம் பள்ளியிலிருந்து கல்லூரிக்கு செல்லும் மாணவியருக்கு மாதம் ரூபாய் ஆயிரம் அவர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகின் றது. பெண்கள் படிப்பதற்காக அல்லது வேலைக்காக பயணம் செய்வதற்கு மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பேருந்து பயணத்திட்டம் செயல்படுத் தப்பட்டு வருகின்றது.
காலை உணவுத் திட்டம்
மேலும், வேலைக்கு செல்லக்கூடிய பெண்களுடைய சிரமத்தை குறைக்க கூடிய வகையில் 1 முதல் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது மிக முக்கியமானது ஆகும். இத்திடத்தின் கீழ் 31,000 பள்ளிகளில், 17 இலட்சம் மாணவ, மாணவியர்கள் பயனடைகின்ற னர்.
இத்திட்டத்திற்கெல்லாம் முதன்மை யான திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் உள்ளது. இந்த திட்டத்திற்கு நம்முடைய தமிழ் நாடு முதலமைச்சர் அவர்கள் வைத் திருக்கும் பெயர்தான் மிக மிக முக்கிய மானது. இது உதவித்தொகை அல்ல. மகளிருக்கான உரிமைத்தொகை.
பெண்கள் கல்வி கற்று பொருளாதாரத்தில் உயர வேண்டும். அதே போல், பொது வாழ்க்கையிலும் ஈடுபட வேண்டும். அப்பொழுதுதான், உங்களுக்கான உரிமைகளை நீங்கள் வலியுறுத்தி பெற முடியும். உள்ளாட்சி பதவிகளில் 50 சதவீத பெண்கள் வந் திருக்கிறார்கள். சென்னை மேயர், தாம் பரம் மேயர், கோயம்புத்தூர் மேயர் என்று உயர் பதவி எல்லாம் பெண்கள் வந்திருக்கின்றார்கள்.
பெண்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக இருப்பது தான் பெண்ணுரிமைக்கான அடித் தளம். இந்த நேரத்தில் மகளிருக்கு ஒரு வேண்டுகோளை வைக்கின்றேன். தந்தை பெரியார் அவர்கள் சொன்னது தான், “மகளிர் நீங்கள் அனைவரும் முற் போக்காக சிந்திக்க வேண்டும், சுதந்திர மாக சிந்திக்க வேண்டும், படிக்க வேண் டும், அரசியலில் ஈடுபட வேண்டும், பகுத்தறிவு வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான், உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளும், முற்போக்காக, சுதந்திரமாக சிந்திக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். இதன்மூலம் ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும் முன்னேற முடியும்.”
ஆண்களை விட பெண்கள் தான் தங்களுடைய வருமானத்தில் பெரும் பகுதியை தங்களுடைய குடும்பத்திற்காக சேமிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்ற னர். எனவே கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகள் அனைவரும் இத்திட்டத்தினை நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வில் மென்மேலும் முன்னேற்றமடைய எனது வாழ்த்துக் களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ் வாறு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் தெரிவித்தார்.
இவ்விழாவில் தருமபுரி நாடாளு மன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, மேனாள் அமைச்சர் முனைவர்.பழனியப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர்.பிரியா, மற்றும் அரசு துறை அலு வலர்கள் பங்கேற்றனர்.