பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) மாநில அளவிலான கால்பந்து மற்றும் கையுந்து பந்துப் போட்டி

viduthalai
1 Min Read

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)
மாநில அளவிலான கால்பந்து
மற்றும் கையுந்து பந்துப் போட்டி

வல்லம். பிப். 12- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான பெரியார் மணியம்மை விளை யாட்டுப் போட்டிகளில் 8, 9.2.2024 ஆகிய நாட்களில் கால்பந்து, கைபந்து, கபாடிப் போட்டிகள் ஆண் களுக்கும் மற்றும் கூடைப்பந்து போட்டி பெண் களுக்கு மட்டும் நடைபெற்றது.
கபாடி போட்டியில் திருச்சி ஜமால் முகம்து கல்லூரி முதலிடத்தினைப் பெற்றது. பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இரண்டாமிடத்தினைப் பெற்றது. கால் பந்து போட்டியில் பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் முதலிடத்தினையும், திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி இரண்டா மிடத்தினையும் பிடித்தன. கைபந்து போட்டியில் கும்பகோணம் அன்னை பொறியில் கல்லூரி முதலிடத் தினையும், சென்னை வேல்டெக் இரண் டாமிடத்தினையும் மற்றும் பெண் களுக்கான கூடைபந்து போட்டியில் திண்டுக்கல் பி.எஸ்.என்.அய். கல்லூரி முதலிடத்தினையும், திருச்சி ஹோலிக் ராஸ் கல்லூரி இரண்டாமிடத்தினையும் பெற்றன. இந்நிகழ்வில் நிலா புரோ மோட்டர்ஸ் நடிகர் சுதாகர், மற்றும் நடிகர் விஜய்கணேஷ், பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ.இராமச் சந்திரன், பதிவாளர் முனைர் பி.கே.சிறீ வித்யா, நிதி ஆலோசகர் பழனிராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர்.
இப்போட்டிக்கான ஏற்பாடுகளை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் உடற்கல்வி துறை இயக்குநர் பேரா.டி. ரமேஷ் சிறப்பாக செய்திருந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *