12-1-2024 அன்று ஆவணம் பகுதியில் உள்ள டாக்டர் கலாம் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற கபடிப் போட்டியில் பங்கு பெற்ற மாணவிகள் முதல் பரிசை வென்றனர். 18-1-2024 அன்று பாபநாசத்திலுள்ள அரசினர் பாலிடெக்னிக்கில் நடைபெற்ற எறிபந்து போட்டியில் மாணவிகள் முதலிடம் பெற்றனர். 8-1-2024 அன்று பாபநாசத்திலுள்ள அரசினர் பாலிடெனிக்கில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் மாணவிகள் முதலிடம் வென்றனர். 7-1-2024 அன்று புதுப்பட்டியிலுள்ள ரம்யா சத்தியநாதன் பாலிடெக்னிக்கில் நடைபெற்ற கோகோ விளையாட்டில் மாணவிகள் முதலிடம் பெற்றனர். 27-1-2024 அன்று நடந்த எறிபந்து போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் முதல்பரிசை வென்றனர். 9-12-2023 அன்று நடைபெற்று முடிந்த கூடைப்பந்து விளையாட்டில் மாணவர்கள் இரண்டாமிடம் வென்றிருந்தனர். இவ்விருதுகளை வென்று இக்கல்லூரிக்கு பெருமை சேர்ந்த பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியரை நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பாராட்டினார். (8-2-2024)
பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டுப் போட்டியில் வென்ற மாணவ, மாணவியருக்கு நிறுவனத் தலைவர் பாராட்டு
Leave a Comment