திருச்சி, பிப். 12- திருச்சி பெரியார் மருந்தியல் கல் லூரியில் தேசிய குடற்புழு நீக்க நாளான 09.02.2024 அன்று திருச்சி சுப்ர மணி யபுரம் ஆரம்ப சுகாதார மய்யத்தின் மூலம் கல்லூ ரியின் முதல்வர் முனை வர் இரா. செந்தாமரை யின் வழிகாட்டுதலில் மாணவர்களுக்கு குடல் புழு நீக்க மாத்திரை வழங் கப்பட்டது.
மருத்துவர் ஆர்.சதிஷ் குமார் குடற்புழு நீக்கத் தின் அவசியம் குறித்தும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் மாணவர்களிடையே எடுத்துரைத்தார். கல்லூ ரியின் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ண மூர்த்தி, குடற்புழு நீக்க ஆல்பென்டசோல் (Albendazote)மாத்திரை களை மாணவர்களுக்கு வழங்கி உட்கொள்ளும் முறைகள் மற்றும் அதன் பயன்கள் குறித்தும் உரை யாற்றினர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார மய்யத்தின் நகர்ப்புற சுகா தார செவிலியர் ஜான்சி மற்றும் நமது கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் பேரா. அ. ஜெஸிமா பேகம் மற்றும் பெரியார் நலவாழ்வு சங் கத்தின் செயலர் பேரா. க.அ.ச. முகமது ஷபீஃக் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இந் நிகழ்ச்சியின் மூலம் 500 மாணவர்களுக்கு மாத்தி ரைகள் வழங்கப்பட்டது.
பெரியார் மருந்தியல் கல்லூரியில் மாணவர்களுக்கு குடல் புழு நீக்க மருந்து – விழிப்புணர்வு

Leave a Comment