சென்னை, பிப்.12- மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி முறை யில் ஆண்டு தோறும் சட்ட மன்ற பேரவையில் உரை யாற்றி கூட்டத் தொடரை தொடங்கி வைப்பது அரச மைப்புச் சட்டப்படி ஆளு நரின் கடமைப் பொறுப்பாகும்.
வரும் ஆண்டில் (2024-2025) மக்கள் பிரச்சினைகள் மீதும், நிதி நிர்வாக முறையிலும் அரசின் கொள்கை நிலை என்ன? எந்த இலக்கை நோக்கி அரசு பயணிக்கும்? என்பது போன்ற அரசின் கொள்கை நிலையை பேரவை யின் கவனத்துக்கு கொண்டு, அதன் மீது எதிர் தரப்பின் கருத்துகளை அறிவது என்பது அரசமைப்பு சட்டம் ஆளுநருக்கு வழங்கியுள்ள கடமையாகும்.
பேரவையில் உரையாற்றும் ஆளுநருக்கு பேரவை யின் வாயிலாக “நன்றி தெரிவிக்கும்” தீர்மானம் நிறை வேற்றி அவருக்கு அனுப்புவது அவை வழியாக கடைப்பிடித்து வரும் மரபாகும். இந்த வழக்காறுகளுக்கும். மரபுகளுக்கும் மாறாக தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என் ரவி கடந்த ஆண்டு. நடந்து கொண்டது போலவே இந்த ஆண்டும் அவையில் மரபுகளை நிராகரித்து, மக்கள் பிரதிநிதிகள் உணர்வுகளையும் புறக்கணித்துள்ளார்.
கூட்டத் தொடக்கத்தில் தமிழ் தாய் வாழ்த்தும், நிகழ்ச்சி நிறைவில் நாட்டுப் பண் இடம் பெறுவதும் நீண்ட பல ஆண்டுகளாக பின்பற்றி வரும் நல் மரபாகும்.
இதற்கு மாறாக ஆளுநர் திரு ஆர் என் ரவி, அரசுடன் இணைந்து தயாரித்த உரையை ஓரிரு நிமிடங்கள் மட்டுமே பேசிவிட்டு, அமர்ந்து விட்டதும், நாட்டுப் பண் இசைக்கும் முன்பு வெளியேறியதும் ஜனநாயக மாண்பு களை சிதைத்து, அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலில் ஈடுபட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. -இவ்வாறு இரா.முத்தரசன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கடமைப் பொறுப்பை நிறைவேற்றாத ஆளுநர் இரா.முத்தரசன் சாடல்
Leave a Comment