ஆளுநர் ஆர்.என்.ரவியின் கடைசி உரை இதுவாகவே இருக்கும் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் ஆவேசம்!

1 Min Read

சென்னை,பிப்.12- தமிழ்நாடு ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்புப் பட்டை அணிந்து இன்று (12.2.2024) சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடப் பாண்டின் முதல் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் இன்று (12.2.2024) தொடங் கிய புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் ரவி உரையுடன் இந்த கூட்டம் துவங்கியது.
வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சார்பில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.

இதனிடையே தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்து சட்டப்பேரவை கூட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். மக்களவைத் தேர் தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி களுக்கு இந்த கூட்டத்துடன் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாத நிகழ்வுகள் 4 நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசின் உரையை படிக்காமல் இரண்டு நிமிடத்தில் தனது உரையை முடித் துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பேரவைத் தலைவர் அப்பாவு ஆளுநர் உரையின் முழு பகுதியையும் வாசித்து முடித்தார். இந்த விவகாரம் தொடர் பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரோடு கிழக்குத்தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன், இதுவே ஆளுநர் ஆர்.என்.ரவியின் கடைசி ஆளுநர் உரையாக இருக்கும் என தெரிவித் துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *