8.10.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
👉 தேர்தலுக்கு முன்பாக, பீகார் மாநிலத்தை போல் ராஜஸ்தானிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அசோக் கேலாட் அறிவிப்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉 மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கை நவம்பரில் கிடைத்த பிறகு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை பகிரங்கப்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என கருநாடக முதலமைச்சர் சித்தரா மையா பேச்சு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
👉 நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் மோடி அரசு கால தாமதம் செய்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம். “பெண்களுக்கு, குறிப்பாக இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க மறுக்கும் பா.ஜ.க,வின் மேட்டுக்குடி மனப்பான்மையால், உரிய காலத்தில் பட்டியலின ஜாதி இடஒதுக்கீடு நீக்கப்படும் அபாயம் உள்ளது” என்றும் எச்சரிக்கை.
தி டெலிகிராப்:
👉 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அரசாங்கத்தை கடுமையாக சாடிய காங்கிரஸ், 2000 ரூபாய் நோட்டின் “இரங்கலை” குறிக்கும் போது, “துக்ளக்‘கின் முடிவு” “நினைவுச் சின்ன பேரழிவை” நினைவூட்டுவதாக நாடு இருக்கும் என மோடி அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
– குடந்தை கருணா