அமைந்தகரை பெரியார் பெருந்தொண்டர் எம்.டி.சுப்பிரமணியன் (வயது 81) மறைவிற்கு கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் இறுதி மரியாதை செலுத்தினார். உடன் வடசென்னை மாவட்டத் தலைவர் தளபதி பாண்டியன், தென்சென்னை மாவட்ட துணை செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், அமைந்தகரை கழகத் தோழர்கள் தூர்காபிரகாசு, அருள்தாசு, முடிதிருத்துநர் ஏ.மோகன், வழக்குரைஞர் திவாகர், நித்தியகுமார் மற்றும் தோழர்கள் மரியாதை செலுத்தினர். மறைந்த சுப்பிரமணியன், திராவிடர் கழகம் உருவான காலத்திலிருந்து இயக்க உணர்வோடு பங்கேற்றவர். சென்னையில் தந்தைபெரியார் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்றவர். அவருடைய மறைவு கழகத்தோழர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பேரிழப்பு. அவரது உடல் இன்று (23.11.2023) சுயமரியாதை முறைப்படி கோயம்பேடு இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அமைந்தகரை பெரியார் பெருந்தொண்டர் எம்.டி.சுப்பிரமணியன் (வயது 81) மறைவிற்கு கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் இறுதி மரியாதை
Leave a Comment