கன்னியாகுமரி கடலில் கம்பம் அமைத்து வைக்கப்பட்டிருந்த காவிக்கொடியினை அகற்ற வலியுறுத்தி 9.2.2024 அன்று காலை 11 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சுப்பையாவிடம் மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமையில் புகார் கொடுத்தனர். மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன், மாவட்ட கழக துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள், மாவட்ட கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ், கழக இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், தொழிற்சங்க செயலாளர் ச.ச. கருணாநிதி,மாவட்ட கழக இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ், கழக தோவாளை ஒன்றிய செயலாளர் ந.தமிழ் அரசன், கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ் கழகத்தோழர் பொன் பாண்டியன், ம.தி.முக.பொறுப்பாளர்கள் விவேகானந்தன், விஸ்வநாதன், சக்தி ஆகியோர் உடன் இருந்தனர்.