சென்னை,பிப்.11- கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளை முன்னிட்டு சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகளுக்கு கேட யத்தை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்.
கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடவும் மற்றும் தமிழ் நாட்டை கொத்தடிமைத் தொழி லாளர் இல்லாத மாநிலமாக உருவாக்கிடவும், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9ஆம் தேதி கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு நாளாக அனுசரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள் ளது. இதையொட்டி, 9.2.2024 அன்று சென்னை தியாகராயர் நகரில் கொத்தடிமைத் தொழி லாளர் முறை ஒழிப்பு நாள் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட் டுத்துறை அமைச்சர் சி.வெ.கணே சன் தலைமையில் தாங்கினார். தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வெ. கணேசன் கொத்தடிமை தொழி லாளர் முறை ஒழிப்பு நாள் விழிப் புணர்வு கையெழுத்து இயக்கத் தினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பில் சிறப்பாக பணிபுரிந்த குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப் பிரிவு துணை காவல் ஆணையர் கோ.வனிதா, சென்னை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ரா.ரெங்கராஜன், அரியலூர் மாவட்ட தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் பெ.தமிழ்ச்செல்வன், நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) எல்.திரு நந்தன் ஆகியோருக்கு கேடயங் களை அமைச்சர் சி.வே.கணேசன் வழங்கினார்.
விழாவில் அமைச்சர் சி.வே. கணேசன் பேசுகையில்,
“1.4.2023 முதல் 31.1.2024 வரை கொத்தடிமை முறையிலிருந்து மீட்கப்பட்ட 188 தொழி லாளர்களுக்கு ரூ.54.30 லட்சம் உடனடி நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. கொத் தடிமைத் தொழிலாளர் முறையை ஒழித்திட தொழிலாளர் துறை யுடன் ஒருங்கிணைந்து அனைத்து பிற துறைகளின் அமலாக்க அலு வலர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். 2030ஆம் ஆண்டுக் குள் தமிழ்நாட்டினை கொத் தடிமைத் தொழி லாளர் முறை இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற நமது முதல மைச்சர் மு.க.ஸ்டாலினின் கன வினை நனவாக்க அனைவரும் உறுதி ஏற்போம்” என்றார்.