இலங்கை சிறையிலிருந்து 77 மீனவர்களையும்,
151 படகுகளையும் உடனடியாக மீட்டிடுக!
பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்
சென்னை, பிப்.11-தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற் படையினரால் அடிக்கடி கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழ் நாடு மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், அவர்களின் பாரம் பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத் திடவும் உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி விரைவான, தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், பிரதமர் நரேந்திர மோடிக்கு 9.2.2024 அன்று கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், இலங்கைக் கடற் கடையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது மற்றும் மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படும் நிகழ்வு அதி கரித்து வருகிறது.
இதனால் பல தலை முறைகளாக இந்த மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு மீனவர்களின் வாழ் வாதார உரிமைகள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்று காலத் தைத் தவிர்த்து, கடந்த சில ஆண்டுகளில் இலங்கைக் கடற்படையினரால் தமிழ் நாடு மீனவர்கள் கைது செய்யப்படுவது கணிசமாக அதிகரித்துள்ளது.
பாரம்பரியமாக தமிழ்நாடு மீனவர் கள் பயன்படுத்தி வரும் மீன்பிடிப் பகுதிகள் இலங்கைக் கடற்படையினரால் கட்டுப்படுத்தப்படுகிறது.
இதனால் மீனவர்களின் வாழ்வா தாரமும், பொருளாதாரமும் பெருமள வில் பாதித்துள்ளது. மீன்பிடித் தொழி லையே நம்பியுள்ள அவர்களின் கலாச் சார மற்றும் சமூகக் கட்டமைப்புக்கு பெருத்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 2023ஆ-ம் ஆண்டில், இலங்கைக் கடற்படையினர் 243 மீனவர்களை கைது செய்துள்ளதுடன், 37 படகு களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த 28 நாட்களில் மட்டும், 6 சம்பவங்களில், 88 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 12 மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட பதற்றமான சூழ் நிலையில், மீன்பிடிக்கச் செல்லும் தமிழ் நாடு மீனவர்கள் மீது அடையாளம் தெரியாத நபர்களால் நடத்தப்படும் தாக்குதல்கள், மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு ஏற்படுத்தும் சேதங்கள் கவலையை மேலும் அதிகரித்துள்ளது.
இதுபோன்ற செயல்கள் மீனவர் களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்ப துடன், மீனவர்களுக்கு பொருளாதார பாதிப்புகளை மேலும் அதிகரித் துள்ளது.
வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளை நாட்டுடைமையாக்கிட இலங்கை அர சாங்கத்துக்கு அதிகாரமளிக்கும் வகை யில், 2018ஆ-ம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்தினால் கடல்சார் சட்டத் தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் தொடர்பாக, முன்னரே தான் எழுதி யிருந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந் தேன்.
இலங்கை அரசின் இந்த நடவடிக் கையால், நல்ல நிலையில் உள்ள, பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்டு, தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர முடியவில்லை. பல மீனவர்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பைக் கொண்டு, தங்களது வர்த்தகத்துக்கு இன்றியமை யாத படகுகளை வாங்குவதற்கும், அவற்றைப் பராமரிப்பதற்கும் முதலீடு செய்துள்ளனர்.
முறையான இழப்பீடு அல்லது மாற்று ஏற்பாடுகள் ஏதுமில்லாமல், படகுகள் இதுபோன்று நாட்டுடையாக் கப்படுவது, மீனவர்களையும், அவர் களது குடும்பங்களையும் நிதி நெருக் கடியில் தள்ளியுள்ளது.
எனவே, பறிமுதல் செய்யப்பட்டு நாட்டுமையாக்கப்பட்டுள்ள இந்திய மீன்பிடிப் படகுகளைத் திரும்பப் பெற்றிடவும், படகுகளை உடனடியாக விடுவித்திடவும் ஏதுவாக, மேற்படி சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற் கொள்ள இலங்கை அரசை வலியுறுத் திட வேண்டும்.
தமிழ்நாடு மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வினை உறுதி செய்திட வும், மீனவ சமூகங்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திட வும் உரிய தூதரக வழிகளைப் பின் பற்றிட வேண்டும். கூட்டு நடவடிக் கைகளின் மூலம் இது சாத்தியமாகும் என்பதால், இந்த நோக்கத்துக்காக அமைக்கப்பட்ட கூட்டு நடவடிக்கைக் குழுவினைப் புதுப்பிக்க, விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
இலங்கை வசம் தற்போதுள்ள 77 மீனவர்கள் மற்றும் அவர்களது 151 படகுகளை உடனடியாக விடுவித்திடத் தேவையான அனைத்து தூதரக முயற்சி களையும் மேற்கொள்ள வேண்டும். 3-1-2024 அன்று பாகிஸ்தான் அதிகாரி களால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களையும், 5-12-2023 அன்று குவைத் கடலோர காவல் படையின ரால் கைது செய்யப்பட்ட நான்கு தமிழ் நாடு மீனவர்களையும் விடுவித்திடவும், உரிய தூதரக வழிமுறைகளைப் பின் பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.