சென்னை, பிப்.11- தொழில் வளர்ச்சிக்கு தொடர்புடைய சிறு – குறு – நடுத்தர தொழில் முனைவோர்கள் மற்றும் பொதுமக்கள் தேவையான பஜாஜ் ஃபின்சர்வ் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒரு புதிய ஈக்விட்டி ஃபண்டான “பஜாஜ் ஃபின்சர்வ் லார்ஜ் அண்ட் மிட் கேப் ஃபண்ட்” அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.
இது “மோட் இன் வெஸ்டிங்” மூலம் முதலீட்டாளர்களின் நிதி வருவாயை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. நீண்டகால நிலைத்தன்மை மற்றும் வருவாயை உறுதி செய்வதற்காகவும், முதலீட்டை இலக்காகக் கொண்ட ஒரு திறந்த – முனை ஈக்விட்டி திட்டமாகும். முதலீட்டாளர் களுக்கு நீடித்த மதிப்பை வழங்கும் இந்தப் ஃபண்ட் 6.2.2024 அன்று தொடங்கப்பட்ட 20.2.2024 அன்று முடிவடைகிறது என இந்நிறுவன தலைமை நிருவாக அதிகாரி கணேஷ் மோகன் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் விளைச்சல் அதிகரிப்புக்கு உதவும் புத்தாக்கமான வாகனங்கள் அறிமுகம்
சென்னை, பிப்.11- இந்திய விவசாயிகளின் தேவைகளை நன்குணர்ந்து பிராந்திய ரீதியில் அவர்களுக்கானத் தேவைக்கேற்ப தொழில்நுட்பக் கருவிகளை பன்னாட்டு தொழில் நுட்பத் தரத்தில் தொடர்ந்து அளித்து வரும் சோனலிகா டிராக்டர்ஸ் நிறுவனம், விவசாயிகளின் விளைச்சல் அதிகரிப்புக்கும் சிறந்த எரிபொருள் சிக்கனமான என்ஜின் கொண்ட 10 புதுரக டைகர் ஹெவி டூட்டி டிராக்டர்களை 40-75 எச்.பி. பிரிவில் அறிமுகம் செய்துள்ளது.
இப்புதிய வேளாண் பயன்பாட்டிற்கான வாகனங்களின் வடிவமைப்பு அய்ரோப்பாவில் மேற்கொள்ளப்பட்டது. 5 பன்முக வேகத்திறன் கொண்டதாக மற்றும் 3 மேம்பட்ட மற்றும் செயற்கை நுண்ணறிவுத் திறனுடைய 5ஜி ஹைட்ராலிக்ஸ் வசதி மற்றும் 140 + மேம்பட்ட பன்முக செயல்பாடுகளைக் கொண்டதாகவும் மற்றும் பல்வேறு மேம்பட்ட விவசாயிகளின் பண்ணை செயல்பாடுகளுக்கு மட்டுமின்றி அனைத்து வகையான வேளாண் மற்றும் வர்த்தக செயல்பாடுகளுக்கேற்றவையாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன என இண்டர்நேஷனல் டிராக்டர்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் டாக்டர் அம்ரித் சாகர் மிட்டல் தெரிவித்துள்ளார்.
அனைத்து துறைகளில் வங்கியின் நிதி சேவை அதிகரிப்பு
சென்னை, பிப்.11- 2024ஆம் நிதியாண்டில் வங்கியின் செயல்பாடு வளர்ச்சியை எட்டுவதோடு வருவாயை அதிகரிக்கச் செய்வது என்ற எங்களது முக்கிய அம்சமான இலக்கு நோக்கிய பயணத்தை எட்டுவதாக அமைந்துள்ளது என சூர்யோதய் வங்கியின் நிருவாக இயக்குநர் பாஸ்கர் பாபு தெரிவித்துள்ளார்.
இவ்வங்கி வழங்கும் கடன் அளவு முந்தைய நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 40.5 சதவீதம் அதிகரித்து ரூ.7,600 கோடி 2024 நிதியாண்டின் 9 மாதங்களில் எட்டப்பட்டுள்ளது. வங்கியின் ஒட்டுமொத்த செயல்பாடு அனைத்துத் துறைகளிலம் குறிப்பாக நுண்கடன் பிரிவில் அதிகரித்ததும் குறிப்பிடத்தக்கது.
விகாஸ் கடன் திட்டமானது தொடர்ந்து அதிகரித்து சராசரியாக ரூ.2000 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2023ஆம் நிதியாண்டின் 9 மாதங்களில் வங்கி வழங்கிய கடன் அளவு ரூ.3,396 கோடி. இது 2024 – நிதியாண்டின் 9 மாதங்களில் ரூ.4,580 கோடியாக அதிகரித்துள்ளது என அவர் தெரிவித் துள்ளார்.