வடக்கு மாங்குடி, பிப். 10- வடக்கு மாங்குடி பெரியார் பெருந்தொண்டர் மறைந்த அ.பாலகிருஷ்ணன் பெயரன், பா.கருணாகரன்–சுந்தரி இணையரின் மகன் கலைமணி, பனங்காட்டாங் குடி பாண்டியன்- மகாலட்சுமி இணையரின் மகள் இளந்தென்றல் ஆகியோரின் மணவிழா 8.2.2024 அன்று காலை 9 மணி அளவில் வல்லம்படுகை வி.என்.எஸ். குட்டி மணி திருமண மண்டபத்தில் தமிழ் நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் கழகப் பொதுச் செயலாளர் முனை வர் துரை சந்திரசேகரன் நடத்தி வைக்க நடந் தேறியது . பா.மோகன் வரவேற்புரை ஆற்றினார். அண்ணா மலைப் பல்கலைக்கழக தமிழ் இயல் துறை முதுமுனைவர் அரங்க பாரி, செந் துறை அரங்க இளவரசன், கும ராட்சி ஒன்றிய திமுக செயலாளர் ராஜேந்திரன், மேனாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் விஜய சுந்தரம், பேராசிரியர் த. ராச வன்னியன் சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழக மேனாள் மாவட்ட செயலா ளர் கண்ணன் வல்லம் படுகை சேரமான், சிதம்பரம் கோவி. சுந்தரமூர்த்தி ஆகியோர் பாராட் டுரை வழங்கினர். முடிவில் பா.கரு ணாகரன் நன்றி கூறினார்.
வடக்கு மாங்குடிஅ.பாலகிருஷ்ணன் இல்ல மணவிழா அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துரை சந்திரசேகரன் பங்கேற்பு
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books