செந்துறை, பிப். 10- அரியலூர் மாவட்டம் செந்துறையில் ஜெயமணி இல்லத்தை தமிழர் தலைவர் அறிமுகம் செய்து வைத்தார்.
9.2.2024 வெள்ளிக்கிழமைகாலை 10 15 மணி அளவில் செந்துறை சுந்தரா நகரில் உள்ள கழகத் தோழர் சிங்கப்பூர் நா. மணி வண்ணன்-ஆசிரியர் ஜெயலட்சுமி ஆகியோ ரால் கட்டப்பட்ட ஜெயமணி இல்லஅறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட தலை வர் விடுதலை. நீலமேகம் தலைமையேற்க, மாநில ப.க. அமைப்பாளர் தங்கசிவமூர்த்தி வரவேற்புரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் சி. காமராஜ், காப்பா ளர் சு. மணிவண்ணன் மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் தா.மதியழகன். மாநில இளை ஞரணி துணைச் செயலாளர் சு.அறிவன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன், விடு தலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய லாளர் அங்கனூர் சிவா, தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வன்,மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கிய பின்னர்தமிழர் தலைவர் அவர்கள் வாழ்வியல் உரையாற்றி வாழ்த்துரை வழங்கினார்.
அவர் தமது உரையில்திராவிடர் கழக மாநாட்டில் சிக்கனமாக திருமணம் செய்து கொண்ட மணிவண்ணன்-ஜெயலட்சுமி இணையர் வாழ்வில் கடுமையாக உழைத்து இன்றைக்கு பிள்ளைகளைப் படிக்க வைத்து வீடுகட்டி உங்கள் அனைவருக்கும் அதனை அறிமுகம் செய்யக்கூடிய விழாவாக இதை நடத்துகிறார்கள் என்று சொன்னால் பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் வாழ்ந்து காட்டுவோம் வெற்றி பெறுவோம் என்பதை உணர்த்துவதற்கான வாய்ப்பாக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்கள் – பிள்ளை களை சிறப்பாக படிக்க வைத்திருக்கிறார்கள் அதற்காக பாராட்டுகிறோம்
.வீட்டைக் கட்டிப்பார் கல்யாணத்தை பண்ணிப்பார் என்று மிரட்டுவது ஆரியம் – இதையெல்லாம் எளிதாக செய்யலாம் என்று உற்சாகப்படுத்துவது திராவிடம். மக்களின் உயர்வுக்காக பாடுபடுவது திராவிடம்.- மக்க ளிடம் நிலவும் பல்வேறு மூடநம்பிக்கைகளை முறியடித்து அவர்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பது திராவிட இயக்கங்கள் என்று கூறி சிறப்புரையாற்றினார். ம.ஆர்த்தி நன்றி கூறினார்.
பங்கேற்றோர்
மாவட்ட இணைச்செயலாளர் ரத்தின .ராமச்சந்திரன், செந்துறை ஒன்றிய தலைவர் மு.முத்தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர் ராசா. செல்வகுமார், மாவட்ட ஆசிரியரணி அமைப்பாளர் வி. சிவசக்தி, மாவட்டத் துணைத் தலைவர் இரா. திலீபன், மாவட்டத் துணைச் செயலாளர் பொன் செந்தில்குமார், பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் பேராசிரியர் இ.வளன றிவு ,மாவட்ட விவசாய அணி தலைவர் மா.சங்கர், மாவட்ட வழக்கு ரைஞர் அணி அமைப்பாளர் மு. ராஜா, மாவட்ட விவசாய அணி செயலாளர் ஆ. இளவழகன், மாவட்ட தொழிலாளரணி செயலாளர் வெ.இளவரசன், அமைப்பாளர் சி. கருப்புசாமி, மாவட்ட இளைஞரணி செய லாளர் லெ.தமிழரசன், மகளிரணி தலைவர் இந்திரா காந்தி, மகளிரணி செயலாளர் பர மேஸ்வரி, சுதா மதியழகன், ஜெயங்கொண்டம் ஒன்றிய தலைவர் மா. கருணாநிதி ஜெயங் கொண்டம் ஒன்றிய செயலாளர் துரை.பிரபாகரன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் எஸ்.எஸ். திராவிடச் செல்வன், செந்துறை ஒன்றியதுணைச் செயலாளர் த.சுப்புராயன் ,தா.பழூர் ஒன்றிய அமைப்பாளர் சி. தமிழ் சேகரன், செந்துறை ராஜேந்திரன், பொன்பரப்பி சுந்தரவடிவேலு, சே.எழில் மலை, பூ.கலைமணி, ஆண்டிமடம் த.பன்னீர் செல்வம் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர். செந்துறை-ஜெயங்கொண்டம் சாலையில் ஏராளமான கழக கொடிகள் கட்டப்பட்டும் , சுவரொட்டிகள் ஒட்டப்பட்டும், தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தலைமையாசிரியர் தங்க.சிவமூர்த்திக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து.