9.2.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* கருநாடகா, கேரளா மாநிலத்திற்கு உரிய நிதி வழங்காததைக் கண்டித்து நடத்தப்படும் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து மோடி அரசு தீர்வு காண வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.
* விவசாயிகள் போராட்டம். டில்லி எல்லையில் காவல் துறை தடுத்து நிறுத்தம். டில்லி – நொய்டா சாலையில் போக்குவரத்து கடும் பாதிப்பு.
* பிரதமர் மோடி ‘ஓபிசி’ ஜாதியில் பிறக்கவில்லை என்றும் அவர் பொதுப் பிரிவு ஜாதியில் பிறந்தவர் என்றும் ராகுல்காந்தி பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார். உண்மையில் அவர் பொது ஜாதி பிரிவில் பிறந்தவர் என்பதால் அவரது வாழ்நாள் முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த அனுமதிக்க மாட்டார். இதனை ஒவ்வொரு பாஜகவினரிடம் சொல்லுங்கள்’ என்றார்.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* ஒன்றிய அரசுக்கு எதிராக டில்லியில் போராட்டம்: திமுக எம்.பிக்கள் கருஞ்சட்டை அணிந்து முழக்கம், சித்தராமையாவை தொடர்ந்து பினராய் விஜயன் தலைமையில் ஆர்ப்பாட்டம்
* பிரதமர் நரேந்திர மோடி – மாநிலங்களை முனிசி பாலிட்டிகளைப் போல நினைக்கிறார். மாநிலங்கள் இருப்பதோ – மாநிலங்களுக்கு முதலமைச்சர்கள் இருப்பதோ அவருக்கு பிடிக்கவில்லை என்று கேரள முதலமைச்சர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*தாழ்த்தப்பட்ட ஜாதிகளில் உள் ஒதுக்கீடு இல்லா விட்டால், குறிப்பிட்ட சிலரே அதிக பலனைப் பெறு வார்கள் என்கிறது உச்ச நீதிமன்றம்.
* நடப்பு நிதியாண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடு களில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு 22 சதவீதம் குறைவான நிதியை மோடி அரசு ஒதுக்கி யுள்ளது என்கிறது நாடாளுமன்ற குழு அறிக்கை. கிராம வளர்ச்சி துறை கேட்டது ரூ.1.1 லட்சம் கோடி. மோடி அரசு ஒதுக்கியது ரூ.60,000 கோடி மட்டுமே.
* மக்களவைத் தேர்தலுக்கு முன்பு குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவு (என் ஆர்சி) மற்றும் பொது சிவில் சட்டம் (யுசிசி) ஆகிய விவ காரங்களை பாஜக கொண்டு வந்ததற்காக பாஜகவை விமர்சித்ததுடன், பிரிவினைவாத அரசியலுக்கு எதிராக எப்படிப் போராடுவது என்பதை வங்காளம் காட்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* 2014 முதல் மோடி அரசின் தோல்விகள் குறித்து ‘கருப்புத் தாள்’ வெளியிட்டது காங்கிரஸ். வேலையில் லாத் திண்டாட்டம், பணவீக்கம், பொருளாதார முறை கேடு, விவசாயிகளின் துயரம், ஜாதிவாரி கணக்கெடுப்பில் தோல்வி, பாஜக தலைமையிலான ஆட்சியில் பெண் களுக்கு நடந்த அநீதி ஆகியவற்றை ‘கருப்புத் தாள்’ எடுத்துக்காட்டுவதாக காங்கிரஸ் கூறுகிறது.
தி இந்து:
* மராத்தா பிரிவினருக்கு ஓபிசி இட ஒதுக்கீட்டில் இருந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற ஜாரங்கே பாட்டீல் கருத்துக்கு மகாராட்டிரா அமைச்சர் ஜக்கன் பூஜ்பால் கடும் எதிர்ப்பு.
* 27% பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கான ஆணையை நிறைவேற்றுகிறோம் என்பதைக் காட்டுவ தற்காக, ஒன்றிய அரசுத் துறைகள் பொதுப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓபிசி பிரிவினரையும் இடஒதுக் கீட்டு பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் களுடன் இணைக்கின்றனர் என ஓபிசிக்கான நாடாளு மன்ற குழு அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
தி டெலிகிராப்:
* ராமன் கோவில் குடமுழுக்கு விழாவுடன் ஒன்றிய அரசு நெருக்கமாக இருந்த விதம் குறித்து ஆழ்ந்த கவலையை அரசுத் துறையின் மேனாள் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். உள்ளிட்ட 65 அதிகாரிகள் கூட்டு அறிக்கை.
– குடந்தை கருணா