சென்னை, பிப். 9- சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், 180ஆவது வார்டு, திருவள்ளுவர் நகர் முதல் மற்றும் 2ஆவது அவென்யூவில் நடைபெற்று வரும் சாலை மற்றும் நடைபாதை பணியை ஆணை யர் ஜெ.ராதாகிருஷ்ணன் 7.2.2024 அன்று நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, திருவான்மியூர் கடற்கரைச் சாலையில் அங்குள்ள வியாபாரிகளிடம் கடையின் முகப்பில் குப்பைத் தொட்டி வைத்து, அதில் குப்பை யைப் போடவும் அறிவுறுத்தினார்.
பெருங்குடி மண்டலம், 184ஆவது வார்டில் ரூ.10 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிமென்ட் கான்கிரீட் சாலை பணியை விரைந்து முடிக்க அலு வலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் 62 லட்சம் டன் குப்பையும், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் 32 லட்சம் டன் குப்பையும் சேர்ந்துள்ளது.
இதில் பெருங்குடியில் சுமார் 24 லட்சம் டன் குப்பை பயோமைனிங் முறையில் பிரித்தெடுக்கப் பட்டு, 50 ஏக்கருக்கு மேலான நிலம் மீட்டெடுக்கப் பட்டுள்ளது. கொடுங்கையூரிலும் இதுபோன்ற பணி கள் மேற்கொள்ளப்பட்டு நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஒரு நாளைக்கு ஒரு நபரால் 700 கிராம் குப்பை உருவாகிறது. இது சென்னையில் நாளொன்றுக்கு 6 ஆயிரத்து 300 டன் குப்பையாக சேருகிறது. இவற்றை கையாள்வது மிகப்பெரிய சவாலாகும்.
இதைப் பொதுமக்கள் உணர்ந்து குப்பையை வணிக வகையாகப் பிரித்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.