தி.மு.க. – காங்கிரஸ் இடையே அடுத்த வாரம் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை

1 Min Read

சென்னை,பிப்.9- நாடாளுமன்ற தேர்தல் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதனால், அனைத்து கட்சிகளும் கூட் டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க. சார்பில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த மாதம் 29ஆம்தேதி காங்கிரசின் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக், மேனாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழ்நாடு பொறுப் பாளர் அஜோய் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங் கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முதல் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, காங்கிரஸ் 15 தொகுதிகள் வரையில் கேட்டதாக கூறப்பட்டது. ஆனால், 10-க்கும் குறைவான தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என்று தி.மு.க. தரப்பில் தெரிவித்ததாகவும் கூறப்படு கிறது. இதனால், முதல் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதேபோல, 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளையே கேட்டுப்பெற வேண்டுமென காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சு வார்த்தை குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக்கிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது.
இதற்கிடையே, பிப்ரவரி 9ஆம் தேதி (இன்று) 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க. – காங்கிரஸ் இடையே திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் சனிக்கிழமை (நாளை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையை அடுத்த வாரத்தில் நடத்த 2 கட்சி களும் திட்டமிட்டுள்ளது. 2ஆம் கட்ட பேச்சு வார்த்தையின் போது குறைந்தபட்சம் 12 தொகு திகள் வரை கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *