35ஆவது தேசிய சாலை பாதுகாப்பு மாதவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை ஜெயங்கொண்டம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சாகிரா பானு ஆகியோர் தலைமை ஏற்று துவக்கி வைத்தனர்.
அதில் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ – மாணவிகள் திரளாக கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் சாலை பாதுகாப்பை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம், கையில் பதாகைகள் ஏந்தியும், சாலை பாதுகாப்பு பற்றியும், சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களையும் முழக்கமாக எழுப்பிக் கொண்டு ஜெயங்கொண்டம் பெரியார் சிலையிலிருந்து ஆரம்பித்து கடைவீதி, பழுர் ரோடு வழியாக பேருந்து நிலையம் வரை நடைப்பயணம் சென்று சிறப்புடன் நிறைவடைந்தது.