தஞ்சை,பிப்.8- தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் அவர்களின் 78- ஆம் பிறந்த நாளில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பயனடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
6-2 -2024 அன்று தனது 78-ஆம் பிறந்த நாள் காணும் தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங்கிற்கு பகல் 12.30 மணி அளவில் தஞ்சாவூர் வருகை தந்த திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திராவிடர் கழகத்தின் சார்பில் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்
திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, கழக காப்பாளர் மு. அய்யனார், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரப்பாண்டியன், மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிகுமார், மாவட்ட துணை செயலாளர்அ. உத்திராபதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் பேபி. ரெ.இரமேஷ், மாவட்ட இணைச்செயலாளர் வடசேரி தீ.வ.ஞானசிகாமணி, ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரை ராசு, தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், தஞ்சை மாநகர செயலாளர் அ.டேவிட், மாநகரத் துணைத் தலைவர் செ.தமிழ்ச் செல்வன், மாநகர துணைச் செயலா ளர் இரா. இளவரசன், புதிய பேருந்து நிலைய பகுதி தலைவர் கலைச் செல்வன், மெடிக்கல் பகுதி தலைவர் பா.விஜயகுமார், மாவட்ட தொழி லாளர் அணி செயலாளர் செ.ஏகாம் பரம், தஞ்சை தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் நா.வெங்கடேசன், விக்கிரபாண்டியம் அழகிரி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக இணைச் செய லாளர் ஆ.லெட்சுமணன், கலைச் செல்வி அமர்சிங், பெரியார் சமூகத் தொடர் கல்வி கல்லூரி நிர்வாகி மற்றும் ஊழியர்கள், விசிறி சாமியார் முருகன் அடிகளார் ஆகியோர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.