திருப்பூர், பிப்.8- பெரியார் பெருந் தொண்டர் பொள்ளாச்சி கி.பாரதி சில காலம் இதய நோயால் பாதிக்கப் பட்ட நிலையில் 3.2.2024 அன்று காலை 8:45 மணியளவில் தனது 67ஆவது வயதில் மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகி றோம். அடுத்த நாள் (4.2.2024) அன்று காலையில் எவ்வித மதச் சடங்குகளுமின்றி இறுதி நிகழ்வு நடைபெற்றது.
பொள்ளாச்சியிலிருந்து 2008ஆம் ஆண்டில் திருப்பூர் சென்று அங்கு பூலுவபட்டிப் பிரிவில் உள்ள தோட்டத்துப்பாளையம் என்ற பகுதியில் வசித்து வந்தார். அங்கு அவரது வாழ் விணையர் தனலட் சுமி அவர்கள் காலமான பிறகு தனது இரு மகன்களுடன் (மூத்தவர் ‘ஒளி’, இளையவர் ‘சிபி’) வாழ்ந்து வந்தார்.
கோவை மாவட்ட மேனாள் செயலாளராக இருந்த பாரதி பொள்ளாச்சியின் மிகச் சிறந்த கருஞ்சட்டைத் தோழராக இருந்த கொள்கைப் போராளியாவார். ஆசிரியர் மேல் மிகுந்த பற்றும் நம்பிக்கையும் கொண்டவர். கழகத் தோழர்களிடம் மிகுந்த பாசத்துட னும் கழகப் பணிகளில் ஆளுமை மிக்கவராகவும் இருந்தார்.
கழகத்தை யாராவது அவர் முன்பு குறைகூறிப் பேசினால் கடுங்கோபங்கொண்டு யாராக இருந்தாலும் எதிர்த்துப் பேசி விளக்கமளிப்பவராய் இருந்தார். ஒருமுறை பொள்ளாச்சி மாரியம் மன் திருவிழா காலத்தில் கடவுள் மறுப்பு வாசகங்களை சுவரெழுத் துப் பணியாகச் செய்து வந்த போது அதனைத் தடுத்துச் சிலர் தாக்க முற்பட்டபொழுது தன் தோழர்களுடன் எதிர்த்து நின்று விரட்டியடித்து சுவரெழுத்துப் பணியைத் தொடர்ந்து செய்து முடித்தார்.
கழகம் அறிவித்த பல போராட் டங்களில் தோழர்களுடன் பங் கேற்று சிறை சென்றுள்ளார். பொள்ளாச்சி ஆட்டோ ஓட்டுநர் களின் சங்கத் தலைவராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர்.
அவர் மறைந்த அன்று பொள் ளாச்சி கழக மாவட்டக் காப்பாளர் தி.பரமசிவம், மாவட்டத் தலைவர் சி.மாரிமுத்து, மாவட்ட அமைப் பாளர் சு.ஆனந்தசாமி, நகர அமைப் பாளர் க.வீரமலை, மாவட்ட துணை செயலாளர் சிவராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரவீன் ஆகியோர் சென்று மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தி அவரது உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.
மேலும் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கோவை ராம கிருஷ்ணன், ஆறுச்சாமி, முத்துக் குமார், பொள்ளாச்சி மனோகரன், மேனாள் தி.மு.க. நகர மன்ற உறுப்பினர் ரங்கநாதன், தோழர் சுசீந்திரன் ஆகியோரும் மாலையணி வித்து மரியாதை செய் தனர். மேலும் பல ஆட்டோ சங்க தோழர்கள், பல்வேறு இயக்கத் தோழர்கள், மரி யாதை செலுத் தினர். அடுத்த நாளும் திருப்பூர், கோவை, அவினாசி, கணியூர் ஆகிய இடங்களிலிருந்து வந்த கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.