விழுப்புரம் மாவட்டம் மாம் பழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வரும், நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பணியாற்றி பணி ஓய்வு பெற்றவருமாகிய பெரியார் பெருந்தொண்டர் கு.தாமோதரன் கடந்த 6.2.2024 அன்று பிற்பகல் 2 மணியளவில் மறைவுற்றார் என் பதை அறிவிக்க வருந்துகிறோம். நேற்று (7.2.2024) பிற்பகலில் எவ்வித சடங்குகளுமின்றி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மறைவுற்ற கு.தாமோதரன் நூலகத்துக்காக ரூ.50 லட்சம் மதிப்புள்ள இடத்தை கொடையாக வழங்கியவர். மேலும் 400 புத்தகங்களை நூலகத்துக்கு கொடையளித்தவர் ஆவார். தம்முடைய வாழ்நாள்முழுவதும் தந்தைபெரியார் கொள்கை களில் உறுதியாக இருந்ததுடன், அவர்தம் குடும்பத்தினரையும் அவ்வாறே வழிநடத்தி வந்தவர். ‘உண்மை’ இதழில் பகுத் தறிவு அடிப்படையில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடலூர் மாவட்டத் தலைவர் சொ.தண்டபாணி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் அருணாசலம், வடகுத்து தலைவர் பாசுகர், நூலகர் கண்ணன் மற்றும் கழகத்தோழர்கள் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள்.