திருச்சி, பிப்.8 ஒன்றிய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மேலச்சிந்தாமணி அண்ணா சிலை அருகே இன்று (8.2.2024) சி.பி.எம். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில், ஜெயசீலன் முன்னிலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.பி.எம். மாநில குழு உறுப்பினர் சிறீதர், தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் க.வைரமணி, தி.மு.க. மாநகர செயலாளர் மதிவாணன், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் ரெக்ஸ், சி.பி.அய். மத்திய கட்டுப்பாட்டு பொறுப்பாளர் எம்.செல்வராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் தனிஅமுதன், சி.பி.அய். மாநகர் மாவட்ட செயலாளர் சிவா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தெற்கு மாவட்ட செயலாளர் ஹபிபூர் ரகுமான், மனித நேய மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா, திராவிடர் கழக மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.