திருச்சி, அக்.9- அரியலூர் ரெட்டிபாளையம் அருகில் ஒன்றிய அரசின் நிதியுதவி பெற்று செயல் பட்டு வரும் உண்டு – உறைவிட பள்ளியான கஸ்தூரிபா காந்தி பாலிகா பள்ளியில் பயின்று வரும் ஏழை – எளிய கிராமப்புற சிறுமிகளுக்கு அடிப் படை உதவிகள் அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறு வனம் வழங்கியுள்ளது.
இந்நிறுவனம் தனது சமூக நலப் பணிகளை “சமூக நல மற்றும் கிரா மப்புற மேம்பாட்டுக்கான ஆதித்ய பிர்லா சென்டர் மூலம் அதன் தலைவர் ராஜசிறீ பிர்லா தலை மையில், கல்விப் பணிகள், சுகாதாரப் பணிகள், நிலையான வாழ்வாதார திட்டங்கள், அடிப்படை வசதிகளை கிராமப்புற மக்களுக்காக செயல் படுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சி யாக கஸ்தூரிபா காந்தி பாலிகா பள்ளி மாணவி களுக்கு கல்வி உதவிகள் வழங்கப்படுகிறது.