தூத்துக்குடி,அக்.10 – தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் துறைக்கு நிகழாண்டு ரூ.24ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் நகராட்சி நிர்வாகம் – குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு.
தூத்துக்குடியில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட் டுள்ள அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் திறப்பு விழா, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 8.10.2023 அன்று நடைபெற்றது.
இதில், நகராட்சி நிர்வாகம்- குடிநீர்த் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று புதிய கட்டடங்களை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 282 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி களும் வழங்கி பேசியதாவது:
நகர்ப்புற உள்ளாட்சித் துறைக்கு நிகழாண்டு ரூ.24ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் நோக்கம், குடிநீர், சாலை வசதி, கழிவுநீர் கால்வாய், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதாகும்.
தமிழ்நாட்டில், உள்ள நகர்ப்புறங் களில் 60 சதவீதம் பேர் வாழ்ந்து வருகின்றனர்; 10 சதவீதம் பேர் வந்து செல்கின்றனர். எனவே, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் ஒரே நேரத்தில் சுமார் ரூ. 16 ஆயிரம் கோடிக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில், 38 இடங்களில் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள், 100க்கும் மேற்பட்ட இடங்களில் காய்கனி சந்தை அமைக்கும் பணிகள் ஆகியவை நடை பெற்று வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.
தங்கம் தென்னரசு
நிதி – மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது:
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ் நாடு முதலமைச்சரால் அடிக்கல் நாட் டப்பட்ட பர்னிச்சர் பூங்காவுக்கான பணிகள் விரை வில் தொடங்கப்படும். இதற்காக பல்வேறு நிறுவனத்தினரிடம் ஒப்பந்தங்கள் பெறப் பட்டுள்ளன. மேலும் டைடல் பார்க் பணி கள் நடை பெற்று வருகின்றன. இதனால், தென் தமிழ் நாட்டில் தொழில் வளம் பெரு கும். தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேவை யான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.
கனிமொழி
மக்களவை தி.மு.க. குழுத் துணைத் தலைவர் கனிமொழி பேசியதாவது:
ரயில், பேருந்து, விமானம், கப்பல் ஆகிய போக்குவரத்து வசதிகள் ஒருங் கிணைந்த நகரமாக தூத்துக்குடி விளங்கி வருகிறது. தமிழ்நாடு மக்கள் தெளிவாக முடிவெடுக்கக் கூடியவர்கள். தமிழர்களாக ஒன்றிணைந்து தமிழ் உணர்வோடு வளர்ச்சிக்கு பாடுபடு வோம் என்றார்.
இக்கூட்டத்தில், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன், மீன் வளம், மீனவர் நலன் – கால் நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், நகராட்சி களின் நிர்வாக இயக்குநர் சிவராசு, ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர் மார்க் கண்டேயன், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரம்மசக்தி உள்பட பலர் பங்கேற்றனர்.