7.2.2024
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி, சமாஜ்வாடி கட்சி எதிர்ப்பு. இதற்காக குழு அமைத்ததே தவறு என சீதாராம் யெச்சூரி கருத்து.
* பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஜாதிகளில் இடஒதுக்கீட்டினால் பயனடைந்தவர்கள் இப்போது இடஒதுக்கீடு பிரிவில் இருந்து வெளியேறி, அவர்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உறுதியான நடவடிக் கையின் பலனைப் பெற வழிவகை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் கருத்து.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* இந்திய கூட்டணியில் மம்தா அங்கம் வகிப்ப தாகவும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment