சென்னை,பிப்.7- அண்ணாவின் 115ஆவது பிறந்தநாளையொட்டி நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் 12 சிறைக் கைதிகளை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி கடலூர் சிறையில் நீண்ட காலமாக இருக்கும் செல்வ ராஜ், சேகர், பெரியண்ணன், உத் திரவேல் (எ) உக்கிரவேல் ஆகி யோர் விடுதலை செய்யப்பட்டுள் ளனர்.
கோவை சிறையில் உள்ள அபுதாஹீர் (எ) அபு, விஸ்வநாதன் (எ) விஜயன், கமல் (எ) பூரி கமல், ஹரூண் பாட்ஷா (எ) ஹரூண், சாகுல் அமீது, பாபு (எ)ஊமையில் பாபு ஆகியோர் விடுதலை செய்யப் படுகின்றனர்.
அதைப்போன்று வேலூர் மத்திய சிறையில் இருக்கும் சிறீனி வாசன், சென்னை புழல் மத்திய சிறையில் இருக்கும் ஜாஹீர் (எ) குண்டு ஜாஹீர் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான அரசாணை 5.2.2024 அன்று வெளியிடப்பட்டது.