உடல் குறைபாடு ஒருவரது வாழ்க்கைக்கும் முன்னேற்றத்துக்கும் தடையல்ல என்பதை உச்ச நீதி மன்றம் நிரூபித்தது. செவித்திறன் அற்ற வழக்குரைஞர் சாரா, சைகை மொழி நிபுணர் உதவியோடு வழக்காட அனுமதிக்குமாறு வழக்குரைஞர் சஞ்சிதா வேண்டு கோள் விடுத்தார். அதை உடனடியாக ஏற்றுக் கொண்டார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட். செப்டம்பர் 22 அன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
செவித்திறன் குறைபாடு கொண்ட சாராவுக்கு உச்ச நீதிமன்ற செயல்பாட்டைச் சைகை மொழியில் விளக்கினார் சவுரவ் ராய்சவுத்ரி. இவர்கள் இருவரும் தகவல்களைச் சைகை மொழியில் பரிமாறிக் கொண்டனர்.
வழக்குரைஞர் சவுதாமினியைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் செவித்திறன் குறைபாடு கொண்ட இரண்டாம் வழக்குரைஞ ராக சாரா அறியப்படுகிறார். உடல் குறைபாடு கொண்ட வர்களுக்கு அரசுப் பணிக ளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கக் காரணமாக இருந்த சந் தோஷ்குமார், பார்வைத் திறன் குறைபாடு கொண்ட வர். உச்ச நீதிமன்ற நடை முறைகளை அனைவரும் அணுகும் வகையில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் எனத் தலைமை நீதிபதி கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார். தற்போது செவித்திறன் குறைபாடு கொண்ட சாரா வுக்கு வழக்காட வாய்ப்பளித்து, அதை நடைமுறைப் படுத்தியுள்ளது உச்ச நீதிமன்றம்.