மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங் களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
காவிரி நீர் பிரச்னையில் வேண்டுமென்றே உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி கருநாடகம் செயல் படுகிறது. மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தண்ணீரைத் திறந்துவிடாமல் தமிழ்நாட்டுக்கு எதிராக கருநாடகத்தில் நடைபெறும் போராட் டங்களுக்கு அந்த மாநில அரசே துணை போனது.
இதனால் காவிரிப் படுகை பகுதிகளில் சுமார் மூன்றரை லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி நெற்பயிர்கள் கருகிக் கொண்டிருக்கின்றன.
உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கக் கூடாது என போராட்டம் நடத்தி வரும் பாஜக மற்றும் கன்னட அமைப் புகளை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் வரும் 11-இல் முழு அடைப்புப் போராட்டம் நடை பெறவுள்ளது. இதற்கு மதிமுக முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது என்று வைகோ தெரிவித்துள்ளார்.