பலி வாங்கும் ‘நீட்’ தேர்வு ராஜஸ்தானில் மாணவர்கள் தற்கொலை

1 Min Read

ஜெய்பூர்,அக்.10 ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிதின் பாஜ்தார்(வயது 18). இவர் சிகார் மாவட்டத்தில் உள்ள பயிற்சி மய்யத்தில் சேர்ந்து ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இதற்காக அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் 8.10.2023 அன்று நிதின் தனது அறையை விட்டு வெளியே வரவில்லை. அவரது அறை உள்புறமாக பூட்டப்பட்டிருந்த நிலையில், சந்தேகமடைந்த அவரது நண்பர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது தெரிய வந்ததது. பின்னர் இது குறித்து தகவலறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று நிதினின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக உத்யோக்நகர் காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த மாதம் 5-ஆம் தேதி, நிதின் தங்கியிருந்த அதே விடுதியில் தங்கி ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்த கவுஷல் மீனா(வயது 16) என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார். இதேபோல், பல்வேறு பயிற்சி மய்யங்களை கொண்ட ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில், இந்த ஆண்டு மட்டும் இதுவரை 23 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. மேலும் மாணவர்கள் இதுபோன்ற சூழல்களில் மனநல ஆலோசனைகளைப் பெறுவதற்கான இலவச உதவி எண்களை அழைக்கலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *