23.11.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
👉தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே நம்பிக்கை.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉 பீகாருக்கு சிறப்பு தகுதி கோரி நிதிஷ்குமார் அமைச்சரவையில் தீர்மானம்.
👉பாஜக நாட்டின் பெயரை மட்டுமே மாற்றியது, அந்தஸ்தை மாற்றவில்லை. பாஜகவை அடிமைக் கட்சி களின் தலைவன் என்று வர்ணித்ததுடன், 2021இல் தமிழ்நாட்டில் அடிமை கட்சியை தோற்கடித்தோம். அதேபோல அடிமைக் கட்சிகளின் தலைவன் பா.ஜ.க.வை நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்” என அமைச்சர் உதயநிதி பேச்சு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
👉தமிழ்நாடு ஆளுநருக்குப் பதிலாக மாநிலப் பல் கலைக் கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை மாற்றும் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருவதாக, தமிழ்நாடு அரசின் அட்வகேட் ஜெனரல் ஆர்.சுண்முக சுந்தரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
– குடந்தை கருணா