5.2.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ வேலையின்மைக்குக் காரணம் மோடி தான்; கடந்த பத்தாண்டு மோடி ஆட்சி அநியாய காலம் என ராகுல் தாக்கு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ பாரத் மாதா கி ஜெய் என முழக்கமிட வற்புறுத்திய மோடி அரசின் அமைச்சர் மீனாட்சி லேகி. அமைதி காத்த பார்வையாளர்களைக் கண்டு எரிச்சல் அடைந்தார். முழக்கம் எழுப்புவதில் பங்கேற்கத் தயங்கும் பெண்ணை வெளியேற வேண்டும் என பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ மோடி ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகி வருகின்றனர், ஏழைகள் மேலும் ஏழைகளாக மாறுகிறார்கள் ,ஜனநாயக நிறுவனங்களை பி.ஜே.பி. அரசு திட்டமிட்டு பலவீனப்படுத்துகிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
♦ ஜார்க்கண்ட் மாநிலத்தில் 19 ஆண்டுகளாக பாஜகவும் வெளியாட்களும் கனிம வளங்களை கொள்ளையடித்து வந்தனர். இதனைத் தடுத்த காரணத்திற்காக ஹேமந்த் சோரன் மீது பொய் வழக்கு போட்டுள்ளது மோடி அரசு என ஜார்க்கண்ட் முதலமைச்சர் சம்பாய் சோரன் கண்டனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
♦ மோடி அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை அணிதிரட்ட கருநாடக காங்கிரஸ் கட்சி திட்டம். கருநாடக முதலமைச்சர் சித்தராமையாவின் பொருளாதார ஆலோ சகர் பசவராஜ் ராயரெட்டி கூறுகையில், “தென் மாநிலங்க ளின் பொருளாதாரக் கூட்டணி” அமைக்கும் திட்டம் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
– குடந்தை கருணா